செய்திகள்
உயிரிழந்த துணை விமானி அகிலேஷ் குமார்

கேரள விமான விபத்தில் உயிரிழந்த துணை விமானி அகிலேஷ் குமார் உடலுக்கு ஊழியர்கள் அஞ்சலி

Published On 2020-08-09 02:06 GMT   |   Update On 2020-08-09 02:06 GMT
கேரள விமான விபத்தில் உயிரிழந்த துணை விமானி அகிலேஷ் குமார் உடலுக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஊழியர்கள் அஞ்சலி செலுத்தினர்.
வந்தேபாரத் திட்டத்தின் கீழ் துபாயில் இருந்து கேரள மாநிலம் கோழிக்கோடு கரிப்பூர் விமான நிலையத்திற்கு நேற்று முன்தினம் ஏர் இந்தியாவின் ஐ.எக்ஸ்.-1344 விமானம் வந்தது. அந்த விமானத்தில் 10 குழந்தைகள், 2 விமானிகள், ஐந்து பணிப்பெண்கள் உள்பட மொத்தம் 191 பேர் பயணம் செய்தனர்.

விமானம் கரிப்பூர் விமான நிலையத்தில் தரையிறங்க முற்பட்டபோது ஓடுதளத்தில் இருந்து சறுக்கிக்கொண்டு பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது இந்த விபத்தில் விமானி, துணை விமானி உள்பட இதுவரை 18 பேர் உயிரிழந்துள்ளனர்.

விமான விபத்தில் விமானி விங் காமாண்டர் தீபக் வி சாத்தே,  துணை விமானி அகிலேஷ் குமார் ஆகியோர் உயிரிழந்தனர்.  விமானி விங் காமாண்டர் தீபக் வி சாத்தே இந்திய விமானப்படையில் போர் விமானத்தை இயக்கியவர்.  ஐதராபாத் விமானப்படை அகாடமியில் ஸ்வார்டு ஆஃப் ஹானர் (Sword of Honour) பெற்றவர். மிகவும் தொழில்முறை விமானி. 58 என்.டி.ஏ. பிரசிடென்ட் தங்க பதக்கம் வென்றவர்.

விமான விபத்தில் உயிரிழந்த துணை விமானி அகிலேஷ் குமார், கடந்த 2017ம் ஆண்டு முதல் ஏர் இந்தியாவில் பணியாற்றி வருகிறார்.  துணை விமானி அகிலேஷ் குமாருக்கு கடந்த ஆண்டுதான் திருமணம் நடைபெற்றுள்ளது. அவர் தனது கர்ப்பிணி மனைவியுடன் வசித்து வந்துள்ளார்.  துணை விமானி அகிலேஷ் குமாருக்கு இன்னும் 15 நாட்களில் குழந்தை பிறக்க இருந்த நிலையில் அவர் மரணமடைந்தார்.  

இந்நிலையில் கேரள விமான விபத்தில் உயிரிழந்த துணை விமானி அகிலேஷ் குமார் உடலுக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஊழியர்கள் அஞ்சலி செலுத்தினார்கள்.   சொந்த ஊரான உ.பி. மாநிலம் மதுரா எடுத்து செல்லும் வழியில் டெல்லி விமான நிலையத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது.  தனது குழந்தையின் வரவை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த இணை விமானி அகிலேஷ் குமாரின் மரணம் பலரையும் கண்கலங்க வைத்துள்ளது. 
Tags:    

Similar News