செய்திகள்
பிரதமர் மோடி

ரூ.1 லட்சம் கோடி மதிப்பிலான திட்டம் - விவசாயிகளுக்காக பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்

Published On 2020-08-08 21:31 GMT   |   Update On 2020-08-08 21:31 GMT
வேளாண் துறையில் விவசாயிகளுக்கு உதவ, அடிப்படை கட்டுமான வசதிகளை மேம்படுத்த ரூ.1 லட்சம் கோடி மதிப்பிலான நிதி திட்டத்தை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்.
புதுடெல்லி:

வேளாண்மை துறையில் விவசாயிகளுக்கு உதவும் வகையில் அடிப்படை கட்டுமான வசதிகளை மேம்படுத்த ரூ.1 லட்சம் கோடி மதிப்பிலான நிதி திட்டத்தை நிறைவேற்ற மத்திய மந்திரி சபை ஏற்கனவே ஒப்புதல் அளித்துள்ளது.

இந்நிலையில், இந்த திட்டத்தை பிரதமர் மோடி இன்று காணொலி காட்சி மூலம் தொடங்கி வைக்கிறார். அப்போது ‘பிரதமர்-விவசாயிகள் திட்டத்தின்’ கீழ் 6-வது தவணையாக 8½ கோடி விவசாயிகளுக்கு ரூ.17 ஆயிரம் கோடி வழங்கும் பணியையும் அவர் தொடங்கி வைப்பார்.

இந்த விழாவில் மத்திய வேளாண்மை துறை மந்திரி நரேந்திர தோமர் பங்கேற்கிறார். மேலும், நாடு முழுவதிலும் இருந்து விவசாயிகள், கூட்டுறவு நிறுவனங்கள் மற்றும் பொது மக்கள் கலந்து கொள்கின்றனர்.
Tags:    

Similar News