செய்திகள்
பா.ஜனதா

ராஜஸ்தான் அரசியல்: எம்.எல்.ஏ.க்கள் விலைபோக வாய்ப்பு?: ஆறு பேரை குஜராத்திற்கு அனுப்பியது பா.ஜனதா

Published On 2020-08-08 12:23 GMT   |   Update On 2020-08-08 12:23 GMT
ராஜஸ்தான் மாநில சட்டசபை கூட்டம் வருகிற 14-ந்தேதி கூடும் நிலையில், ஆறு எம்.எல்.ஏ.க்களை குஜராத் மாநிலத்திற்கு அனுப்பியுள்ளது பா.ஜனதா.
ராஜஸ்தான் மாநிலத்தில் அசோக் கெலாட் உடன் ஏற்பட்ட மனக்கசப்பால் சச்சின் பைலட் 18 எம்.எல்.ஏ.க்களுடன் போர்க்கொடி தூக்கினார். இதனால் சச்சின் பைலட் துணை முதல்வர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.

அவர் ஒரு அணியாக உள்ளார். ஆனால் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.-வாகவே உள்ளார். அதேவேளையில் 101 எம்.எல்.ஏ.-க்களுடன் அசோக் கெலாட் சட்டசபையில் பலத்தை நிரூபிக்க திட்டமிட்டுள்ளார்.

சச்சின் பைலட் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் ஓட்டலில் தனியாக தங்கியுள்ளனர். அதேபோல் அசோக் கெலாட் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் சொகுசு ஓட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். குதிரைப் பேரம் நடைபெற வாய்ப்புள்ளதல் எம்.எம்.ஏ.க்களை இழத்துவிடக் கூடாது என்பதில் கவனமாக இருக்கிறார்கள்.

இந்நிலையில் ராஜஸ்தான் மாநில பா.ஜனதாவைச் சேர்ந்த நிர்மல் குமாவத், கோபிசந்த் மீனா, ஜாபர் சிங் சங்க்லா, தரம்வீர் மொச்சி, கோபால் லால் ஷர்மா, குருதீப் சிங் ஷாபினி ஆகியோர் விமானம் மூலம் குஜராத் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

அங்குள்ள சொகுசு ஓட்டலில் அவர்கள் தங்கவைக்கப்பட்டுள்ள நிலையில் சோம்நாத் கோவிலில் தரிசனம் செய்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அசோக் கெலாட் மற்றும் சச்சின் பைலட் ஆகியோர் தங்களது ஆதரவு எம்.எல்.ஏ.க்களை ஓட்டலில் தங்கவைத்து பாதுகாப்பதுபோல் நீங்களும் பாதுகாக்க இந்த நடவடிக்கை எடுத்துள்ளீர்களா?, என்று மாநில பாரதீய தலைவர் சதீஷ் பூனியாவிடம் கேட்டதற்கு, அப்படி ஒன்றுமில்லை என்று மறுப்பு தெரிவித்துள்ளார்.

மேலும், ‘‘நாங்கள் ஒற்றுமையாக உள்ளோம். எந்த அவநம்பிக்கையும் இல்லை. காங்கிரஸ் அரசு வதந்திகைளை சமூக வலைதளங்கள் மூலம் பரவ விட்டு குழப்பத்தை ஏற்படுத்திகிறார்கள். பா.ஜனதா எம்.எல்.ஏ-க்கள் கூட்டம் நடைபெற்று, அனைவரும் சட்டசபையில் பங்கேற்பார்கள்’’ என்றார்.

விமான நிலையத்திற்கு ஆறு எம்.எல்.எ.-க்களுடன் வந்த பா.ஜதனா எம்.எல்.ஏ. அசோக் லஹோட்டி, அவர்கள் துன்புறுத்தப்பட்டார்கள். வலுக்கட்டாயமாக யாத்திரிகைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர் என்றார்.

இதனால் பா.ஜனதா எம்.எல்.ஏ.-க்களில் சிலர் கட்சி மாறலாம். அதனால் அவர்களை தற்காத்துக் கொள்ள இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
Tags:    

Similar News