செய்திகள்
உயிரிழந்த விமானி தீபக் வி சாத்தே

உயிரிழந்த விமானி தீபக் சாத்தே இந்திய விமானப்படையில் பணிபுரிந்தவர்

Published On 2020-08-08 03:42 GMT   |   Update On 2020-08-08 03:42 GMT
கேரள விமான விபத்தில் உயிரிழந்த விமானி இநதிய விமானப்படையை சேர்ந்த முன்னாள் தலைசிறந்த விமானியாக பணிபுரிந்துள்ளார்.
வந்தேபாரத் திட்டத்தின் கீழ் துபாயில் இருந்து கேரள மாநிலம் கோழிக்கோடு கரிப்பூர் விமான நிலையத்திற்கு நேற்று ஏர் இந்தியாவின் ஐ.எக்ஸ்.-1344 விமானம் வந்தது. அந்த விமானத்தில் 10 குழந்தைகள், 2 விமானிகள், ஐந்து பணிப்பெண்கள் உள்பட மொத்தம் 191 பேர் பயணம் செய்தனர்.

விமானம் கரிப்பூர் விமான நிலையத்தில் தரையிறங்க முற்பட்டபோது ஓடுதளத்தில் இருந்து சறுக்கிக்கொண்டு பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது இந்த விபத்தில் விமானி, துணை விமானி உள்பட இதுவரை 18 பேர் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்த விமானி விங் காமாண்டர் தீபக் வி சாத்தே ஆவார். இவர் இந்திய விமானப்படையில் போர் விமானத்தை இயக்கியவர். தேசிய பாதுகாப்பு அகாடமியின் முன்னாள் மாணவர். இவர் போயிங் 737 விமானத்தை நன்றாக இயக்கும் அனுபவம் பெற்றவர் எனக் கூறப்படுகிறது.

ஐதராபாத் விமானப்படை அகாடமியில் ஸ்வார்டு ஆஃப் ஹானர் (Sword of Honour) பெற்றவர். மிகவும் தொழில்முறை விமானி. 58 என்.டி.ஏ. பிரசிடென்ட் தங்க பதக்கம் வென்றவர். பயணிகள் விமானத்திற்கு வருவதற்கு முன் சிறந்த போர் விமானியாக இருந்தார்..

துணை விமானி அகிலேஷ் குமாருக்கு கடந்த ஆண்டுதான் திருமணம் நடைபெற்றுள்ளது. FlightRadar24 இணையதளத்தில் விமானம் தரையிறங்குவதற்கு முன் பல முறை வானில் வட்டமிட்டு இரண்டு முறை இறங்க முயற்சி செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உதவி எண்கள்: ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் - 1800 2222 71, விமான  நிலைய கட்டுப்பாட்டு அறை - 0483 2719493, மலப்புரம் கலெக்டர் அலுவலகம் - 0483 2736320, Kozhikode Collectorate - 0495 2376901.
Tags:    

Similar News