செய்திகள்
பிரதமர் மோடி

கேரள விமான விபத்து தொடர்பாக முதல்-மந்திரி பினராயி விஜயனிடம் பிரதமர் மோடி பேச்சு

Published On 2020-08-07 18:12 GMT   |   Update On 2020-08-07 18:12 GMT
கேரள விமான விபத்து தொடர்பாக முதல்-மந்திரி பினராயி விஜயனிடம் பிரதமர் மோடி தொலைபேசியில் பேசினார்.
புதுடெல்லி:

துபாயில் இருந்து கேரள மாநிலம் கோழிக்கோடு கரிப்பூர் விமான நிலையத்திற்கு ஏர் இந்தியாவின் ஐ.எக்ஸ்.-1344 விமானம் வந்தது. விமானத்தில் 10 குழந்தைகள், 2 விமானிகள், ஐந்து பணிப்பெண்கள் உள்பட மொத்தம் 191 பேர் இருந்தனர்.

விமானம் 10-வது ஓடுதளத்தில் தரையிறங்கியது. ஆனால் ஓடுதளத்தையும் தாண்டி விமான நிற்காமல் சென்றது. இதனால் அருகில் உள்ள பள்ளத்தில் விழுந்தது. இதில் விமானம் இரண்டாக பிளந்தது. இதனால் விமானத்தின் முன்பகுதியில் இருந்தவர்கள் பலத்த காயம் அடைந்தனர்.

தற்போது வரை விமானி உள்பட 15 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகிறது. மீட்டுப் பணியில் தேசிய பேரிடர் மீட்புப்படை, தீயணைப்பு வீரர்கள், போலீசார்கள் ஈடுபட்டுள்ளனர். கோழிக்கோடு மற்றும் மலப்புரம் ஆட்சியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

இந்நிலையில் கேரள விமான விபத்து தொடர்பாக முதல்-மந்திரி பினராயி விஜயனிடம் பிரதமர் மோடி தொலைபேசியில் பேசினார். மத்திய அரசு தேவையான உதவிகளை செய்யும் என  பிரதமர் மோடி உறுதி அளித்ததாகவும், நெருக்கடியை எதிர்கொள்ள கேரள அரசின் அனைத்து துறைகளும் இணைந்து செயல்படும் என்று பினராயி விஜயனிடம் பிரதமர் மோடி தெரிவித்தார்.

மேலும் கோழிக்கோடு மற்றும் மலப்புரம் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் ஐ.ஜி. அசோக் யாதவ் உள்ளிட்ட அதிகாரிகள் குழு விமான நிலையத்திற்கு வந்து மீட்புப் பணியில் பங்கேற்றுள்ளதாக கேரள் முதல்-மந்திரி பினராயி விஜயன் பிரதமர் மோடியிடம் தொலைபேசியில் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News