செய்திகள்
பிரதமர் மோடி

தூய்மை இந்தியா குறித்து நாளை மாணவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல்

Published On 2020-08-07 14:30 GMT   |   Update On 2020-08-07 14:30 GMT
தூய்மை இந்தியா குறித்து நாளை நாட்டின் பல்வேறு பகுதி மாணவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடுகிறார்.
புதுடெல்லி:

மகாத்மா காந்தியின் சுத்தமான இந்தியா எனும் கனவை நிறைவேற்றும் வகையில் கடந்த 2014-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி பிரதமர் மோடி தூய்மை இந்தியா திட்டத்தை அறிமுகம் செய்தார்.

இந்தியாவில் 55 கோடிக்கும் அதிகமான மக்கள் திறந்தவெளியைக் கழிப்பறையாக உபயோகிக்கும் போக்கை விடுத்து, கழிப்பறைகளைப் பயன்படுத்தும் நிலைக்கு மாறியுள்ளனர். உலகம் முழுவதிலும் இருந்து இதற்காக இந்தியாவுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகின் மற்ற நாடுகள் பின்பற்றும் அளவிற்கு இந்தியா முன்னோடியாக உள்ளது. தூய்மை இந்தியா இயக்கம் தற்போது இரண்டாவது கட்டத்தில் உள்ளது.

இந்நிலையில் தூய்மை இந்தியா குறித்து நாளை நாட்டின் பல்வேறு பகுதி மாணவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடுகிறார். முன்னதாக ராஷ்ட்ரிய ஸ்வச்சதா கேந்திரா என்ற தேசிய தூய்மை மையத்தை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.

திறந்தவெளிக் கலையரங்கில், சமூக விலகியிருத்தல் விதிமுறைகளைப் பின்பற்றி, இந்தக் கலந்துரையாடல் நடைபெறும். இதைத் தொடர்ந்து பிரதமர் நாட்டுக்கு உரையாற்றுகிறார்.
Tags:    

Similar News