செய்திகள்
முதல் மந்திரி பினராயி விஜயன்

கேரளா நிலச்சரிவில் சிக்கி 5 பேர் பலி - மீட்பு பணிகளை முடுக்கிவிட்ட பினராயி விஜயன்

Published On 2020-08-07 07:11 GMT   |   Update On 2020-08-07 07:11 GMT
கேரளாவின் இடுக்கியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 5 பேர் பலியாகி உள்ளனர். 10 பேர் மீட்கப்பட்டனர்.
திருவனந்தபுரம்:

கேரளாவில் பருவகால மழைப்பொழிவை முன்னிட்டு பல பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது.  இதனால், நகரங்களில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் நிலாம்பூர் பகுதியில் தொடர் கனமழையால் தண்ணீர் பெருக்கெடுத்து, தெருக்களில் தேங்கி நிற்கிறது.

இதற்கிடையே, கேரளாவின் இடுக்கி, மலப்புரம் மற்றும் வயநாடு பகுதிகளில் வரும் 11-ம் தேதி வரை தீவிர கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதுடன் ஆபத்து நிலையை குறிப்பிடும் சிவப்பு வண்ண எச்சரிக்கையும் விடுத்துள்ளது.

இந்நிலையில், கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் ராஜமாலா பகுதியில் கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டு உள்ளது. இதில் சிக்கியவர்களில் 5 பேர் உயிரிழந்து உள்ளனர். இதுவரை 10 பேர் மீட்கப்பட்டு உள்ளனர் என கேரள போலீசார் தெரிவித்து உள்ளனர்.

சம்பவ பகுதிக்கு போலீசார், தீயணைப்பு துறை மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படையினர் சென்றுள்ளனர்.  மீட்பு பணியை துரிதப்படுத்தும்படி வனம் மற்றும் வருவாய் அதிகாரிகளுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது என முதல் மந்திரி பினராயி விஜயன் தெரிவித்து உள்ளார்.
Tags:    

Similar News