செய்திகள்
கேரளா வெள்ளம்

கேரளாவில் கனமழையால் நிலச்சரிவு- 20க்கும் மேற்பட்டோர் சிக்கியுள்ளதாக தகவல்

Published On 2020-08-07 05:13 GMT   |   Update On 2020-08-07 05:13 GMT
கேரளாவில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் 20-க்கும் மேற்பட்டோர் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
திருவனந்தபுரம்:

கேரளாவில் பருவகால மழைப்பொழிவை முன்னிட்டு பல பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. இதனால், நகரங்களில் வெள்ளநீர் பெருக்கெடுத்து சாலைகளில் ஓடி வழிகிறது. 

கேரளாவில் காங்கிரஸ் எம்.பி.யாக ராகுல் காந்தி தேர்வு செய்யப்பட்ட வயநாடு தொகுதிக்கு உட்பட்ட வயநாடு, இடுக்கி மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக கனமழை பெய்துள்ளது. இதில், வீடுகள், கட்டிடங்கள் மற்றும் குடிசை பகுதிகள் ஆகியவை நீரால் சூழப்பட்டு உள்ளன. சாலையெங்கும் நீர் நிரம்பி குளம்போல் காட்சி தருகிறது. மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது.

ஒருபுறம் கொரோனா பாதிப்புகள் கேரளாவை ஆட்டிப்படைத்து வரும் சூழலில், மறுபுறம் மழையால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் ராஜமலை பகுதியில் திடீரென இன்று நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.  
இதில் 20-க்கும் மேற்பட்டோர் மண்சரிவில் சிக்கியுள்ளதாக தகவல் வெளியானது. தகவலறிந்து போலீசார் மற்றும் தீயணைப்பு துறை அதிகாரிகள் சம்பவ பகுதிக்கு உடனடியாக சென்றுள்ளனர்.

வெள்ளத்தால் ராஜமலை சுற்றியுள்ள பகுதிகளில் மின்சாரம் முழுவதுமாக துண்டிக்கப்பட்டுள்ளது
Tags:    

Similar News