செய்திகள்
ஜோக் நீர்வீழ்ச்சி

கர்நாடக மாநிலத்தின் சுற்றுலா மையங்களில் ஒன்றான ஜோக் நீர்வீழ்ச்சி - சீசன் ஆரம்பம்

Published On 2020-08-06 18:29 GMT   |   Update On 2020-08-06 18:51 GMT
கர்நாடக மாநிலத்தின் முதன்மையான சுற்றுலா மையங்களில் ஒன்றான ஜோக் நீர்வீழ்ச்சியில் தண்ணீர் வேகமாக சீறிப்பாய்ந்து விழுகின்றது.
பெங்களூரு:

கர்நாடக மாநிலத்தில் உள்ள சிவமொக்கா ‘மலை நாடு‘ என்ற புனைப் பெயருடன் அழைக்கப்படுகிறது. மலைப்பிரதேசமான சிவமொக்காவில் ஏராளமான சுற்றுலா தலங்கள் உள்ளன. இதில் முதன்மையானது ஜோக் அருவியாகும்.

இது கர்நாடகத்தின் மிக முக்கியமான சுற்றுலா தலமாகும். லிங்கனமக்கி அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர், ஜோக் நீர்வீழ்ச்சிக்கு சென்று அங்குள்ள அருவிகளில் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.



இங்கு கர்நாடகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள்.

உலக புகழ்பெற்ற ஜோக் அருவியில் சுமார் 800 அடி உயரத்தில் இருந்து தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவது கண்கொள்ளா காட்சியாக இருக்கும். இதைத்தவிர ஜோக் அருவியில் ‌‌ஷராவதி மின் உற்பத்தி நிலையமும் அமைந்துள்ளது. லிங்கனமக்கி அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் ‌‌ஷராவதி மின் உற்பத்தி நிலையத்துக்கு வந்த பிறகு தான் ஜோக் அருவிக்கு வருகிறது. 



உலக அளவில் 13–வது இடத்தில் உள்ளது ஜோக் நீர்வீழ்ச்சி ஆகும்.  பெரும் இரைச்சலுடனும் தண்ணீர் விழும் நீர்வீழ்ச்சிக்கு ‘ரோரா‘ என்றும், தண்ணீர் வேகமாக சீறிப்பாய்ந்து விழும் நீர் வீழ்ச்சிக்கு ‘ராக்கெட்‘ எனவும் பெயரிடப்பட்டு உள்ளது.  கர்நாடகத்தின் மிக முக்கியமான சுற்றுலா தலமாக இருக்கும் இந்த இயற்கை அழகை ரசிக்க ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம். கொரோனா காரணமாக இந்த ஆண்டு சுற்றுலா பயணிகள் வருகை குறைந்துள்ளது.

Tags:    

Similar News