செய்திகள்
வைரம்

மத்திய பிரதேசத்தில் சுரங்கம் தோண்டும்போது வைரம்: லட்சாதிபதியான தொழிலாளி

Published On 2020-08-06 17:21 GMT   |   Update On 2020-08-06 17:21 GMT
மத்திய பிரதேசத்தில் சுரங்கம் தோண்டிய தொழிலாளி கையில் 7.5 காரட் வைரம் கிடைத்ததால் லட்சாதிபதியாகி உள்ளார்.
மத்திய பிரதேச மாநிலம் பன்னா மாவட்டத்தில் ஏராளமான வைர சுரங்கங்கள் உள்ளன. சுபால் என்ற தொழிலாளி சுரங்கத்தை தோண்டியபோது 7.5 காரட் அளவிலான மூன்று வைர கற்கள் கிடைத்தன. அதை வைர அலுவலகத்தில் டெபாசிட் செய்துள்ளார்.

அந்த அலுவலகம் வைரத்தை ஏலம் விட்டு 12 சதவீதம் வரியை பிடித்தம் செய்து கொண்டு 88 சதவீத தொகையை சுபாலிடம் வழங்கும். வைரத்தின் விலை 30 லட்சத்தில் இருந்து 35 லட்சம் வரை இருக்கும் எனக் கூறப்படுகிறது.

இதனால் சுபால் ஒரேநாளில் லட்சாதிபதியாக மாறியுள்ளார்.

இதே பன்னா மாவட்டத்தில் சில நாட்களுக்கு முன் மற்றொரு தொழிலாளி 10.69 காரட் வைரத்தை கண்டுபிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News