செய்திகள்
முதல்-மந்திரி பினராயி விஜயன்

கேரளாவில் 30 ஆயிரத்தை கடந்த கொரோனா - இன்று மேலும் 1,298 பேருக்கு தொற்று

Published On 2020-08-06 17:12 GMT   |   Update On 2020-08-06 17:12 GMT
கேரளாவில் இன்று மேலும் 1,298 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என முதல் மந்திரி அலுவலகம் தெரிவித்துள்ளது.
திருவனந்தபுரம்:

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் மராட்டியம் முதல் இடமும், தமிழகம், ஆந்திரா, டெல்லி மற்றும் கர்நாடகா ஆகியவை அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளன. தற்போது கேரளாவிலும் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

கேரளாவில் ஆரம்ப காலத்தில் கட்டுப்பாட்டில் இருந்த கொரோனா வைரஸ் தற்போது வேகமாக பரவி வருகிறது.

இந்நிலையில், கேரள மாநிலத்தில் இன்று மேலும் 1,298  பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.  இதனால் கொரோனா தொற்றால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 30,449 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா தொற்றிலிருந்து 800 பேர் ஒரே நாளில் குணமடைந்துள்ளனர்.  இதுவரை 18,337 பேர் குணமடைந்து, மருத்துவமனையில் இருந்து சிகிச்சை முடிந்து சென்றுள்ளனர் என தெரிவித்து உள்ளது.

வைரஸ் தாக்குதலுக்கு இன்று 3 பேர் உயிரிழந்த நிலையில், கொரோனா தாக்குதலுக்கு உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 97 ஆக அதிகரித்துள்ளதாக அம்மாநில முதல்-மந்திரி பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.  
Tags:    

Similar News