செய்திகள்
இந்திய நாடாளுமன்றம்

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் பங்கேற்பது கடினம்: திரிணாமூல் காங்கிரஸ்

Published On 2020-08-06 17:00 GMT   |   Update On 2020-08-06 17:00 GMT
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஆகஸ்ட் மாதம் நடத்தப்பட்டால் எங்களால் பங்கேற்க இயலாது என்று திரிணாமூல் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
இந்திய நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் மார்ச் 23-ந்தேதி தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. கொரோனாவால் நாடு தழுவிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டால் இரண்டு வாரத்திற்கு முன்னதாகவே கூட்டம் முடிக்கப்பட்டது.

கடந்த மாதம் மழைக்கால கூட்டத்தொடரை நடத்த இரு அவைகளின் சபாநாயகர்களும் முயற்சி செய்தனர். ஆனால் கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவில் அதிகரித்து வருவதால் தள்ளிப்போகியுள்ளது.

இந்த மாதம் கடைசி வாரத்தில் கூட்டத்தை நடத்த வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த மாதம் கூட்டம் நடத்தப்பட்டால் எங்களால் கலந்து கொள்ள இயலாது என்று திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் மக்களவை தலைவர் சுதிப் பாண்டோபாத்யாய் கூறுகையில் ‘‘கடந்த வாரம், மக்களவை சபாநாயகர் எனக்கு போன் செய்து, ஆகஸ்டு மாதம் மழைக்கால கூட்டத்தொடர் தொடங்க வாய்ப்பு உள்ளதாக கூறினார்.

ஆனால் ஆகஸ்ட் மாதம் கூட்டத்தொடர் தொடங்கினால் எங்களால் பங்கேற்க இயலாது என்று எங்கள் கட்சி தெரிவித்துள்ளது. இந்த மாதம் நடைபெற இருக்கும் நாடாளுமன்ற கமிட்டி கூட்டத்திலும் பங்கேற்ற இயலாது. செப்டம்பர் மாதம் கூட்டம் நடைபெறும் என்றால், அதுகுறித்து ஆலோசிப்போம்’’ என்றார்.

மேலும், விதிப்படி இரண்டு கூட்டத்திற்கு இடையில் ஆறு மாதத்திற்கு மேல் இடைவெளி இருக்கக் கூடாது. அப்படி பார்க்கும்போது செப்டம்பர் மாதம் நாடாளுமன்றம் கூட வேண்டும். விதி குறித்த நாங்கள் தெரிந்து வைத்துள்ளோம். கட்சித் தலைவர் மம்தா பானர்ஜியுடன் ஆலோசனை  நடத்திய பின் முடிவு எடுப்போம்’’ என்றார்.
Tags:    

Similar News