செய்திகள்
ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் அசோக் கெலாட்

6 எம்.எல்.ஏ.க்கள் இணைப்பு: இடைக்கால தடைவிதிக்க ராஜஸ்தான் கோர்ட் மறுப்பு- அசோக் கெலாட் நிம்மதி

Published On 2020-08-06 11:18 GMT   |   Update On 2020-08-06 11:18 GMT
ராஜஸ்தான் காங்கிரஸில் ஆறு எம்.எல்.ஏ.க்கள் இணைந்ததற்கு எதிரான மனுவில் இடைக்கால தடை வழங்க கோர்ட் மறுப்பு தெரிவித்துள்ளது.
ராஜஸ்தானில் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்து வருகிறது. சச்சின் பைலட் 18 எம்.எல்.ஏ.-க்களுடன் எதிராக செயல்பட்டால் அசோக் கெலாட்டிற்கு சிக்கல் ஏற்பட்டது.

இதற்கிடையில் பகுஜன் சமாஜ் கட்சியின் ஆறு எம்.எல்.ஏ.-க்களை காங்கிரஸ் கட்சியுடன் அசோக் கெலொட் இணைத்திருந்தார். இந்த சம்பவம் கடந்த ஆண்டு நடைபெற்றது.

தற்போதுள்ள சூழ்நிலையை சாதகமாக்கிக் கொள்ள விரும்பிய பகுஜன் சமாஜ் கட்சி, ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தில் எம்.எல்.ஏ.-க்கள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து மனுதாக்கல் செய்தது. இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது.

அப்போது எம்.எல்.ஏ. இணைப்புக்கு இடைக்கால தடைவிதிக்க வேண்டும் என பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் முறையிடப்பட்டது. ஆனால் ஒரு நீதிபதி கொண்ட பெஞ்ச் இந்த கோரிக்கையை நிராகரித்தது. அத்துடன் வருகிற 11-ந்தேதி இதுகுறித்து முடிவு எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது.

இதனால் அசோக் கெலாட் நிம்மதி அடைந்துள்ளார். சச்சின் பைலட் மற்றும் 18 பேர் போர்க்கொடி தூக்கியுள்ளதால் காங்கிரசுக்கு 102 இடங்கள் உள்ளது. ஒருவேளை ஆறு எம்.எல்.ஏ.-க்கள் இணைபுக்கு இடைக்கால தடைவிதிக்கப்பட்டால் சட்டசபை பலம் 96 ஆக குறைந்துவிடும். அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் 14-ந்தேதி சட்டசபையில் மெஜாரிட்டியை இழக்கும் நிலை காங்கிரசுக்கு உருவாகும்.
Tags:    

Similar News