செய்திகள்
மும்பை கனமழை

மும்பை கனமழை எதிரொலி - 46 ஆண்டு இல்லாத அளவுக்கு கொலாபாவில் கொட்டிய மழை

Published On 2020-08-06 07:47 GMT   |   Update On 2020-08-06 07:47 GMT
மகாராஷ்டிராவில் பெய்து வரும் கனமழை எதிரொலியால், 46 ஆண்டு இல்லாத அளவுக்கு கொலாபா பகுதியில் மழை கொட்டித் தீர்த்துள்ளது.
மும்பை:

நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கக்கூடிய நிலையில், மும்பையில் கன மழை பெய்து வருகிறது. இரண்டு நாட்களுக்கும் மேலாக பெய்த கனமழையால் பெருத்த சேதத்தினை மும்பை சந்தித்து வருகிறது. குறிப்பாக, தெற்கு மும்பையின் கொலாபா பகுதியில் ஆகஸ்ட் மாதத்தில் 46 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு  நேற்று மழை பதிவானது.

அடுத்த சில மணி நேரங்களுக்கு கனமழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என முதல் மந்திரி உத்தவ் தாக்கரே எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கேட் வே ஆப் இந்தியா பகுதியில் இருந்து தொடங்கும் மும்பையின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள கொலாபா பகுதியில் ஒரே நாளில் 333.8 மி.மீட்டர் மழை பதிவானது. இது 1974-ம் ஆண்டுக்கு பிறகு ஆகஸ்ட் மாதத்தில் ஒரு நாளில் பெய்த மிக அதிக அளவு மழை பொழிவாகும். மும்பையில் ஆகஸ்ட் மாதத்தில் பெய்ய வேண்டிய மழையில் 64 சதவீதம், முதல் 5 நாட்களிலேயே  பெய்துள்ளது.
Tags:    

Similar News