செய்திகள்
மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா

இந்திய வரலாற்றில் ஒரு தங்க அத்தியாயம் - அமித்ஷா புகழாரம்

Published On 2020-08-05 23:43 GMT   |   Update On 2020-08-05 23:43 GMT
ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டியதன் மூலம், இந்திய வரலாற்றில் ஒரு தங்க அத்தியாயத்தை பிரதமர் மோடி எழுதி உள்ளார் என மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தெரிவித்தார்.
புதுடெல்லி:

மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவதால், ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்க இயலவில்லை. இதற்கிடையே, இந்த விழா குறித்து அமித்ஷா தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

அவர் கூறியிருப்பதாவது:-

இந்த நாள், வரலாற்று சிறப்புமிக்க, பெருமைக்குரிய நாள். ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டியதன் மூலம், இந்திய வரலாற்றில் ஒரு தங்க அத்தியாயத்தை பிரதமர் மோடி எழுதி உள்ளார். ஒரு புதிய சகாப்தத்தின் தொடக்கத்துக்கு கட்டியம் கூறுவதாக இது அமைந்துள்ளது. ராம பக்தர்களின் நூற்றாண்டு கால தியாகம், போராட்டம் ஆகியவற்றின் விளைவுதான், இந்த கோவில் கட்டுமானம். பிரதமர் மோடியின் வலிமையான, உறுதியான தலைமையை இது உணர்த்துகிறது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News