செய்திகள்
துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு

ராமர் கோவில் கட்ட வெங்கையா நாயுடு ரூ.5 லட்சம் நன்கொடை

Published On 2020-08-05 21:49 GMT   |   Update On 2020-08-05 21:49 GMT
அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணிக்காக துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு தனது குடும்பத்தின் சார்பில் ரூ.5 லட்சம் நன்கொடையாக வழங்கி இருக்கிறார்.
புதுடெல்லி:

அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணிக்காக துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு தனது குடும்பத்தின் சார்பில் ரூ.5 லட்சம் நன்கொடையாக வழங்கி இருக்கிறார். இதற்கான காசோலையை ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளைக்கு அவர் அனுப்பி வைத்து இருக்கிறார்.

இதேபோல், கொரோனா ஒழிப்புக்காக பிரதமர் நிதிக்கு (பி.எம். கேர்ஸ்) ரூ.5 லட்சத்துக்கான காசோலையை அனுப்பி வைத்து உள்ளார். கொரோனா ஒழிப்புக்காக கடந்த மார்ச் மாதம் தனது ஒரு மாத சம்பளத்தை பிரதமர் நிதிக்கு வழங்கிய வெங்கையா நாயுடு, இந்த பணிக்காக ஒவ்வொரு மாதமும் தனது சம்பளத்தில் 30 சதவீத தொகையை கொடுப்பதாகவும் ஏற்கனவே அறிவித்து உள்ளார்.

அயோத்தியில் ராமர் கோவில் கட்ட நேற்று பூமி பூஜை நடைபெற்ற போது, வெங்கையா நாயுடு டெல்லியில் உள்ள துணை ஜனாதிபதி மாளிகையில் தனது மனைவி உஷா நாயுடுவுடன் சேர்ந்து ராமாயணம் வாசித்தார். ராமருக்கு கோவில் கட்டுவதை வரவேற்றுள்ள அவர், ராமரின் வாழ்க்கை ஒவ்வொருவருக்கும் முன்மாதிரியாக இருக்கும் என்றும் கூறி உள்ளார்.
Tags:    

Similar News