செய்திகள்
பிரதமர் மோடி

லெபனான் வெடி விபத்து - பலியானோர் குடும்பத்துக்கு பிரதமர் மோடி இரங்கல்

Published On 2020-08-05 04:07 GMT   |   Update On 2020-08-05 04:07 GMT
லெபனானில் ஏற்பட்ட வெடிவிபத்தில் பலியானோர் குடும்பத்துக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள துறைமுகத்தில் 6 ஆண்டாக வைக்கப்பட்டு இருந்த 2,750 டன்கள் எடை கொண்ட அமோனியம் நைட்ரேட் வேதிப்பொருள் வெடித்து சிதறியது. இந்த பயங்கர விபத்தில் 73 பேர் பலியாகினர். ஆயிரக்கணக்கானோர் படுகாயம் அடைந்தனர்.

இந்நிலையில், லெபனான் வெடிவிபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக, பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், பெய்ரூட் நகரத்தில் நடந்த மிகப்பெரிய வெடி விபத்து அதிக அளவில் உயிர்சேதம் மற்றும் பொருட்சேதம் அடைந்திருப்பது  வேதனையையும் அதிர்ச்சியையும் அளிக்கிறது.

வெடி விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். காயம் அடைந்தவர்கள் விரைவில் குணம் அடைய பிரார்த்திக்கிறோம் என பதிவிட்டுள்ளார்.
Tags:    

Similar News