செய்திகள்
டிகே சிவக்குமார்

சமூக இடைவெளியை காற்றில் பறக்கவிட்ட டி.கே.சிவக்குமார்

Published On 2020-08-05 03:21 GMT   |   Update On 2020-08-05 03:21 GMT
அப்சல்புரா தாலுகாவில் உள்ள தேவலகங்காபுரா கிராமத்திற்கு சென்ற டி.கே.சிவக்குமாரை வரவேற்க காங்கிரஸ் தொண்டர்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கப்படவில்லை. இதுதொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலானது.
கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் நேற்று கலபுரகிக்கு சென்று இருந்தார். கலபுரகி விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்த அவருக்கு காங்கிரஸ் தொண்டர்கள் ஒன்று கூடி உற்சாக வரவேற்பு அளித்தனர். மேலும் டி.கே.சிவக்குமாருக்கு ஏராளமானோர் மாலை அணிவித்து வரவேற்றனர்.

அப்போது டி.கே.சிவக்குமாரும், காங்கிரஸ் தொண்டர்களும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க மறந்து விட்டனர். இதனால் அங்கு சமூக இடைவெளி என்பது காற்றில் பறந்தது. மேலும் அப்சல்புரா தாலுகாவில் உள்ள தேவலகங்காபுரா கிராமத்திற்கு டி.கே.சிவக்குமார் சென்றார். அங்கு அவரை வரவேற்க ஏராளமான காங்கிரஸ் தொண்டர்கள் திரண்டனர். இதனால் அங்கேயும் சமூக இடைவெளி என்பது கடைப்பிடிக்கப்படவில்லை.

இதுதொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலானது. இந்த வீடியோவை பார்த்த பலரும் டி.கே.சிவக்குமாருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த சித்தராமையா, ஐவான் டிசோசா ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. ஆனால் டி.கே.சிவக்குமார் தன்னை தனிமைப்படுத்தி கொள்ளாமல் உள்ளார். மேலும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கவும் அவர் மறந்து விட்டார். ஒரு அரசியல் கட்சியின் தலைவரே கொரோனா விதிகளை மீறி இப்படி நடந்து கொள்ளலாமா? என்று கேள்வி எழுப்பி உள்ளனர்.
Tags:    

Similar News