செய்திகள்
முதல் மந்திரி பிப்லாப் குமார் தேப்

குடும்பத்தினருக்கு கொரோனா - தனிமைப்படுத்திக் கொண்ட திரிபுரா முதல் மந்திரி

Published On 2020-08-04 02:13 GMT   |   Update On 2020-08-04 02:13 GMT
தனது குடும்பத்தினருக்கு கொரோனா உறுதியானதை தொடர்ந்து, திரிபுரா முதல் மந்திரி பிப்லாப் குமார் தேப் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டார்.
புதுடெல்லி:

இந்தியாவில் கொரோனா வைரசின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கையும், உயிரிழப்பும் அதிகமாகி கொண்டே செல்கிறது.

கொரோனா வைரஸ் தொற்றுக்கு அனைத்து தரப்பு மக்களும் ஆளாகி வருகின்றனர். மத்திய மந்திரிகள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள், முதல் மந்திரிகள், திரைப்பட நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள் என பலரும் கொரோனாவால் பாதிப்பு அடைந்துள்ளனர்.

இந்நிலையில், தனது குடும்பத்தினருக்கு கொரோனா அறிகுறி தென்பட்டதை தொடர்ந்து, திரிபுரா முதல் மந்திரி பிப்லாப் குமார் தேப் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன் என டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

மேலும், குடும்பத்தினருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து, நானும் பரிசோதனை செய்துள்ளேன். முடிவுக்கு காத்துக் கொண்டிருக்கிறேன் என பதிவிட்டுள்ளார்.  
Tags:    

Similar News