செய்திகள்
மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான்

ம.பி.முதல்வர் சிவராஜ் சிங் சவுகானுக்கு 2வது பரிசோதனையிலும் கொரோனா தொற்று உறுதி

Published On 2020-08-03 16:38 GMT   |   Update On 2020-08-03 16:38 GMT
மத்திய பிரதேச மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகானுக்கு 2வது பரிசோதனையிலும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
போபால்:

கொரோனாவின் கோரத்தாண்டவத்தினால் நாடு முழுவதும் 13 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள டாக்டர்கள் மற்றும் களப்பணியாளர்கள், அரசியல் தலைவர்களுக்கும் கொரோனா தொற்று பரவி வருகிறது.

மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகானுக்கு கடந்த 25 ஆம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.  தன்னைத்தானே வீட்டில் தனிமைப்படுத்திகொண்ட அவர் மருத்துவர்கள் ஆலோசனைப்படி  போபாலில் உள்ள சிராயூ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில் கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மத்திய பிரதேச மாநில முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகானுக்கு இன்று 2ம் கட்ட கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.   

இந்த பரிசோதனை முடிவிலும் மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகானுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.  மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு 10 நாட்கள் இடைவெளியில் மீண்டும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. 
Tags:    

Similar News