செய்திகள்
மெகபூபா முப்தி, ராகுல்காந்தி

மெகபூபா முப்தியை உடனே விடுதலை செய்ய வேண்டும் - ராகுல்காந்தி வலியுறுத்தல்

Published On 2020-08-02 22:49 GMT   |   Update On 2020-08-02 22:49 GMT
மெகபூபா முப்தியை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்
புதுடெல்லி:

கடந்த ஆண்டு ஆகஸ்டு 5-ந் தேதி, காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது. அந்த நாளில், பிற அரசியல் கட்சி தலைவர்களுடன் மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மெகபூபா முப்தியும் காவலில் வைக்கப்பட்டார். அவர் காவலில் வைக்கப்பட்டு, ஓராண்டு முடிவடைய உள்ளது. இதற்கிடையே, பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ், மெகபூபா முப்தியின் காவலை மேலும் 3 மாதங்களுக்கு காஷ்மீர் நிர்வாகம் நீட்டித்துள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது ‘டுவிட்டர்‘ பதிவில் கூறியிருப்பதாவது:-

இந்திய அரசு சட்டவிரோதமாக அரசியல் தலைவர்களை சிறைவைக்கும்போது, இந்திய ஜனநாயகம் சேதமடைகிறது. எனவே, மெகபூபா முப்தியை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார். இதேபோல், முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரமும் காவல் நீட்டிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News