செய்திகள்
பிரதமர் மோடி

பக்ரீத் பண்டிகை- பிரதமர் மோடி வாழ்த்து

Published On 2020-08-01 04:36 GMT   |   Update On 2020-08-01 04:36 GMT
பக்ரீத் பெருநாளையொட்டி இஸ்லாமிய சகோதரர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:

இஸ்லாமிய நாள்காட்டியின்படி துல் ஹஜ் மாதத்தின் 10-வது நாள் ஈத் அல் அதா எனப்படும் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

தமிழகம் உட்பட நாடு முழுவதும் இன்று வழக்கமான உற்சாகத்துடன் பக்ரீத் கொண்டாடப்படுகிறது. இன்று காலையிலேயே டெல்லியில் புகழ்பெற்ற ஜும்மா மசூதியில் பெருமளவுக்கு இஸ்லாமியர்கள் தொழுகை நடத்த வந்திருந்தனர். மசூதிக்கு செல்வதற்கு முன்பாக அவர்களுக்கு காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பின்னர் சமூக இடைவெளி விட்டு அமர்ந்து அவர்கள் தொழுகையில் ஈடுபட்டனர்.

இதையடுத்து ஏழை எளியவர்களுக்கு மாமிசங்களை பங்கிட்டு கொடுத்து, உற்சாகமாக பக்ரீத் கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகத்தில் மசூதிகள் திறக்கப்படவில்லை என்பதால் இஸ்லாமியர்கள் வீடுகளில் இருந்தே தொழுகை நடத்தினர்.

இந்நிலையில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு இஸ்லாமிய சகோதரர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

பக்ரீத் பண்டிகை வாழ்த்துகள். ஒரு நியாயமான, இணக்கமான மற்றும் அனைத்தையும் உள்ளடக்கிய சமூகத்தை உருவாக்க இந்த நாள் நம்மை ஊக்குவிக்கட்டும். சகோதரத்துவம் மற்றும் இரக்கத்தின் ஆவி வளர்க்கப்படட்டும். ஈத் முபாரக் என பதிவிட்டுள்ளார்.
Tags:    

Similar News