செய்திகள்
இஸ்லாமியர் சிறப்பு தொழுகை

பக்ரீத் திருநாள்- இஸ்லாமியர் சிறப்பு தொழுகை

Published On 2020-08-01 01:55 GMT   |   Update On 2020-08-01 01:55 GMT
பக்ரீத் பெருநாளையொட்டி டெல்லி ஜும்மா மசூதியில் தனி மனித இடைவெளியுடன் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை நடத்தினர்.
புதுடெல்லி:

தியாக திருநாளான பக்ரீத் பண்டிகை இஸ்லாமியர்களால் இன்று கொண்டாடப்படுகிறது.

இறைவனின் கட்டளையை ஏற்று, உயிர்ப்பலி கொடுக்க துணிந்த மற்றும் இறைவனின் விருப்பத்துக்கு கீழ்படிந்த, ஒரு சிறந்த தியாகமாக பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

இறை நம்பிக்கை உள்ளவர்கள் எந்த தியாகத்திற்கும் தயங்கமாட்டார்கள் என்பதை பறைசாற்றும் வகையில், இறைத்தூதர் இப்ராஹிம் இறை கட்டளையை ஏற்று, தனது ஒரே மகனான இஸ்மாயிலை இறைவனுக்காக தியாகம் செய்ய துணிந்ததை நினைவுகூரும் வகையில் பக்ரீத் திருநாள் இஸ்லாமிய பெருமக்களால் கொண்டாடப்படுகிறது.

இன்று பக்ரீத் பெருநாளையொட்டி டெல்லி ஜும்மா மசூதியில் தனி மனித இடைவெளியுடன் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை நடத்தினர்.

ஊரடங்கு கட்டுப்பாட்டால் தமிழகத்தில் இஸ்லாமியர்கள் தங்களது வீடுகளில் சிறப்பு தொழுகை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News