செய்திகள்
மத்திய உயர்கல்வித்துறை செயலர் அமித் கரே

மும்மொழிக் கொள்கையும் சேர்ப்பு - மத்திய உயர்கல்வித்துறை செயலர் அமித் கரே

Published On 2020-07-29 13:40 GMT   |   Update On 2020-07-29 14:39 GMT
புதிய கல்விக் கொள்கையில் மும்மொழிக் கொள்கையும் சேர்க்கப்பட்டுள்ளதாக மத்திய உயர்கல்வித்துறை செயலர் அமித் கரே தெரிவித்துள்ளார்.
டெல்லியில் உள்ள பிரதமர் மோடியின் இல்லத்தில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், புதிய கல்விக் கொள்கையின் திருத்தப்பட்ட வரைவு அறிக்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதில் பல்வேறு முக்கியம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன.

மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் பெயரை, மத்திய கல்வித்துறை அமைச்சகம் என்று மாற்றவும் மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது.

புதிய கல்வித் கொள்கை மாற்றங்களில் தொடர்பான விபரங்களை இன்று மாலை வெளியிடப்பட்டது.   அதில் 34 ஆண்டுகளாக கல்விக் கொள்கையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை எனவும், பொறியியல் போன்ற உயர் படிப்புகளில், ஓரிரு வருடங்கள் விடுப்பு எடுத்துக் கொண்டு பின்னர் படிப்பை தொடரலாம் எனவும், எம்.பில் படிப்புகள் நிறுத்தபடுவதாகவும்,  2030ஆம் ஆண்டுக்குள் அனைவருக்கும் கல்வி என்பதை உறுதிப்படுத்த நடவடிக்கை என்பன உள்ளிட்ட அறிவிப்புகள் வெளியாகின.

இந்நிலையில் புதிய கல்விக் கொள்கையில் மும்மொழிக் கொள்கையும் சேர்க்கப்பட்டுள்ளதாக மத்திய உயர்கல்வித்துறை செயலர் அமித் கரே தெரிவித்துள்ளார்.

மேலும் மும்மொழிக் கொள்கையில் என்னென்ன மொழி என்பதை மாநிலங்களே முடிவு செய்து கொள்ளலாம் என அமித் கரே தெரிவித்தார்.   மும்மொழிக் கொள்கை இருந்தாலும் மாணவர்கள் மீது எந்த மொழியும் திணிக்கப்படாது எனவும் விளக்கம் அளித்தார்.

பள்ளியின் அனைத்து நிலைகளிலும் சமஸ்கிருதம், இதர தொன்மை வாய்ந்த மொழிகள் சேர்க்கப்படும் எனவும்,  பள்ளிகள் மற்றும் உயர்கல்வியில் விருப்ப  மொழியாக சமஸ்கிருதம் சேர்க்கப்படும் என மத்திய உயர்கல்வித்துறை செயலர் அமித் கரே தெரிவித்தார்.

Tags:    

Similar News