செய்திகள்
மம்தா பானர்ஜி

மேற்கு வங்காளத்துக்கான நிதி நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் - மம்தா பானர்ஜி

Published On 2020-07-28 06:18 GMT   |   Update On 2020-07-28 06:18 GMT
கொரோனாவை எதிர்த்து போராட மேற்கு வங்காளத்துக்கான நிதி நிலுவைத் தொகையை மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டுமென மம்தா, மோடியிடம் கேட்டுக்கொண்டார்.
கொல்கத்தா:

மேற்கு வங்காள தலைநகர் கொல்கத்தா, மராட்டிய தலைநகர் மும்பை மற்றும் உத்தரபிரதேசத்தின் நொய்டா ஆகிய 3 நகரங்களில், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் சார்பில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா பரிசோதனை மையங்களை பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் 3 மாநிலங்களின் முதல்மந்திரிகள் காணொலிக் காட்சி வாயிலாக பங்கேற்றனர்.

அதனைத் தொடர்ந்து, 3 மாநிலங்களிலும் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து முதல் மந்திரிகளுடன் மோடி ஆலோசனை நடத்தினார்.

அப்போது கொரோனா வைரசை எதிர்த்து போராட மேற்கு வங்காள மாநிலத்திலுக்கான நிதி நிலுவைத் தொகையை மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டுமென முதல்மந்திரி மம்தா பானர்ஜி, மோடியிடம் கேட்டுக்கொண்டார்.

இது குறித்து அவர் கூறுகையில் “மாநிலத்தின் நிதி நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க நான் மத்திய அரசிடம் கேட்டுக் கொள்கிறேன். நாங்கள் இன்னும் ரூ.53 ஆயிரம் கோடி நிலுவைத் தொகையை பெறவில்லை. அம்பான் புயலுக்கு பிந்தைய மறு சீரமைப்பு பணிகளுக்கு மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து அனைத்து பணத்தையும் பயன்படுத்தினால் நாங்கள் கொரோனா தொற்றை எதிர்த்து எப்படி போராட முடியும். தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கு ஒரு தனி நிதி தேவை. அதைப் பற்றி ஆராய நான் உங்களிடம் (பிரதமர்) கேட்டுக் கொள்கிறேன்” எனக் கூறினார்.
Tags:    

Similar News