செய்திகள்
பிரியங்கா காந்தி

ராஜஸ்தான் அரசை கவிழ்க்க பாஜக முயற்சி: பிரியங்கா குற்றச்சாட்டு

Published On 2020-07-27 03:44 GMT   |   Update On 2020-07-27 03:44 GMT
பா.ஜனதா தலைமையிலான மத்திய அரசு, கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கு பதிலாக, ராஜஸ்தானில் தேர்ந்தெடுக்கப்பட்ட அசோக் கெலாட் அரசை கவிழ்க்க முயன்று வருகிறது என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா கூறியுள்ளார்.
புதுடெல்லி :

ராஜஸ்தான் அரசியல் விவகாரம் தொடர்பாக, பா.ஜனதாவுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி, ‘ஸ்பீக்அப் டெமாகரசி’ என்ற ஹேஷ்டேக் மூலம் டுவிட்டரில் பிரசாரம் செய்து வருகிறது.

அதில், காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா கூறியிருப்பதாவது:-

சிக்கலான தருணங்களில்தான், தலைமையை பற்றி தெரிய வரும். கொரோனா பாதிப்பின்போது, சமூக நலனுக்காக தலைமை பாடுபடுவது அவசியம். ஆனால், பா.ஜனதா தலைமையிலான மத்திய அரசு, கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கு பதிலாக, ராஜஸ்தானில் தேர்ந்தெடுக்கப்பட்ட அசோக் கெலாட் அரசை கவிழ்க்க முயன்று வருகிறது. இப்பிரச்சினையில், அந்த அரசின் உள்நோக்கமும், நடத்தையும் தெரிகிறது. மக்கள் அவர்களுக்கு பதில் அளிப்பார்கள்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News