செய்திகள்
பிரதமர் மோடி

கொரோனா தீவிரமடைந்து வரும் நிலையில் ’மன் கி பாத்’ நிகழ்ச்சியில் பேசுகிறார் பிரதமர் மோடி

Published On 2020-07-25 17:05 GMT   |   Update On 2020-07-25 17:05 GMT
இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் நாளை காலை 11 மணியளவில் பிரதமர் மோடி ‘மன் கி பாத்’ வானொலி நிகழ்ச்சியில் பேசுகிறார்.
புதுடெல்லி:

நரேந்திர மோடி 2014-ம் ஆண்டு இந்தியாவின் பிரதமராக பொறுப்பேற்றது முதல் ’மன் கி பாத்’ (மனதின் குரல்) என்ற நிகழ்ச்சியின் மூலம் மாதம்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 11 மணிக்கு அகில இந்திய வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். 

இந்நிலையில், இந்த மாதத்திற்கான ‘மன் கி பாத்’ வானொலி நிகழ்ச்சி வழக்கம் போல நாளை காலை 11 மணிக்கு தொடங்க இருக்கிறது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 13 லட்சத்தையும் உயிரிழப்பு எண்ணிக்கை 31 ஆயிரத்தையும் கடந்துள்ள நிலையில் நாளைய ’மன் கி பாத்’ சற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

நாளைய ’மன் கி பாத்’ வானொலி நிகழ்ச்சியில் நாட்டில் அரசால் எடுக்கப்பட்டு வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அவர் விவரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News