செய்திகள்
இளவரசர் வில்லியம், இளவரசி கேதே மிடில்டன்

அசாம் காசிரங்கா தேசிய பூங்கா சேதம் : இங்கிலாந்து இளவரசர், இளவரசி கவலை

Published On 2020-07-25 08:41 GMT   |   Update On 2020-07-25 08:41 GMT
அசாம் காசிரங்கா தேசிய பூங்கா வெள்ளத்தால் சேதம் அடைந்ததற்கு இங்கிலாந்து இளவரசர் வில்லியம், இளவரசி கேதே மிடில்டன் கவலை தெரிவித்துள்ளனர்.
கவுகாத்தி:

சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் அசாம் மாநிலம் பெரும் பாதிப்புக்கு உள்ளானது. அங்குள்ள புகழ்பெற்ற காசிரங்கா தேசிய பூங்காவில் 120 வன உயிரினங்கள் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தன. 95 சதவீத பூங்கா பகுதி, வெள்ளத்தில் மூழ்கியது.

இந்த பூங்காவுக்கு கடந்த 2016-ம் ஆண்டு இங்கிலாந்து இளவரசர் வில்லியம், இளவரசி கேதே மிடில்டன் ஆகியோர் நேரில் வந்துள்ளனர். எனவே, வெள்ள சேதம் குறித்து அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

காசிரங்கா தேசிய பூங்காவின் இயக்குனருக்கு எழுதிய கடிதத்தில் வில்லியம் கூறியிருப்பதாவது:-

காசிரங்கா பூங்காவுக்கும், வன உயிரினங்களுக்கும் ஏற்பட்ட சேதத்தை அறிந்து எனக்கும், கேதே மிடில்டனுக்கும் இதயமே நொறுங்கி விட்டது. கொரோனா தாக்கத்துக்கு இடையே ஏற்பட்ட உயிரிழப்புகள் வேதனை அளிக்கிறது. அவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துக் கொள்கிறோம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News