செய்திகள்
திருப்பதி கோவில்

திருப்பதி கோவிலில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 16 அர்ச்சகர்கள் குணமடைந்தனர்

Published On 2020-07-25 01:49 GMT   |   Update On 2020-07-25 01:49 GMT
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த திருப்பதி ஏழுமலையான் கோவில் அர்ச்சகர்கள் 16 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.
திருப்பதி:

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பணியாற்றும் 50 அர்ச்சகர்களில் 15 பேர் மற்றும் தேவஸ்தான ஊழியர்கள், பாதுகாப்பு மற்றும் பறக்கும்படை ஊழியர்கள், லட்டு தயாரிக்கும் ஊழியர்கள் என மொத்தம் 170 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து, அவர்கள் ஆஸ்பத்திரிகளில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் முதல் முறையாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட அர்ச்சகர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதையடுத்து திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனத்திற்காக கவுன்டர்களில் டிக்கெட் விநியோகம் நிறுத்தப்பட்டது. ஆன்லைனில் மட்டுமே திருப்பதி கோவில் தரிசன டிக்கெட் விநியோகம் செய்யப்படும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

திருப்பதியில் கொரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக ஆகஸ்ட் 5ந்தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கொரோனா பாதித்த 17 அர்ச்சகர்களில் 16 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.
Tags:    

Similar News