செய்திகள்
சஞ்சய் ராவத்

அயோத்தி ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழாவில் உத்தவ் தாக்கரே கலந்து கொள்வார்: சிவசேனா

Published On 2020-07-22 03:45 GMT   |   Update On 2020-07-22 03:45 GMT
அயோத்தியில் நடைபெறும் ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழாவில் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே நிச்சயம் பங்கேற்பார் என்று சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் கூறியுள்ளார்.
மும்பை :

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா அடுத்த மாதம் (ஆகஸ்டு) 5-ந் தேதி நடக்கிறது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு அடிக்கல் நாட்டுவார் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் இயக்கத்தில் சிவசேனாவின் பங்கு மிக முக்கியமானது என்பதால் அக்கட்சி தலைவரும், மராட்டிய முதல்-மந்திரியுமான உத்தவ் தாக்கரே கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. மராட்டியத்தில் கொள்கையில் முரண்பட்ட காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் சேர்ந்து சிவசேனா ஆட்சி அமைத்து உள்ள நிலையில் ராமர் கோவில் விவகாரம் தொடர்பாக கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டதாக தகவல் வெளியானது. இந்த நிலையில், செய்தி சேனல் ஒன்றிக்கு அளித்த பேட்டியில் சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் கூறியதாவது:-

அயோத்தியில் நடைபெறும் ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழாவில் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே நிச்சயம் பங்கேற்பார். ஏனெனில் இந்த நிகழ்ச்சியுடன் சிவசேனா உணர்வுபூர்வமான, மதம் மற்றும் தேசிய உறவுகளை பகிர்ந்து கொள்கிறது. அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதில் சிவசேனா மிகப்பெரிய பங்களிப்பை அளித்துள்ளது. சிவசேனாவினர் ரத்தம் சிந்தி ராமர் கோவில் கட்டுமானத்திற்கு தியாகம் செய்துள்ளனர். இந்துத்வாவின் பார்வையில் இந்த விழா வரலாற்று சிறப்பு வாய்ந்தது.

இவ்வாறு அவர் கூறினார். 
Tags:    

Similar News