செய்திகள்
டுவிட்டர்

டுவிட்டர் நிறுவனத்துக்கு மத்திய அரசு நோட்டீஸ்

Published On 2020-07-19 10:09 GMT   |   Update On 2020-07-19 10:09 GMT
பிரபலங்களின் கணக்குகளில் புகுந்து மோசடி செய்யப்பட்டது தொடர்பாக டுவிட்டர் நிறுவனத்துக்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
புதுடெல்லி:

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஒபாமா, அமேசான் அதிபர் ஜெப் பெசோஸ், மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் உள்ளிட்ட பிரபலங்களின் டுவிட்டர் கணக்கில் சமீபத்தில் மர்ம நபர்கள் ஊடுருவி பிட்காயின் மோசடியில் ஈடுபட்டனர். இதில் இந்திய பிரபலங்கள் பலரும் பாதிக்கப்பட்டனர்.

இந்த விவகாரம் தொடர்பாக தற்போது டுவிட்டர் நிறுவனத்துக்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. சைபர் பாதுகாப்பு பொறுப்பு அமைப்பான சி.இ.ஆர்.டி.இன், இந்த நோட்டீசை அனுப்பி உள்ளது.

அதில், இந்த மோசடியில் பாதிக்கப்பட்ட இந்தியர்களின் விவரங்கள், இதில் பாதிப்பு ஏற்பட்ட தரவுகள் போன்றவற்றை அளிக்குமாறு அதில் கேட்கப்பட்டு உள்ளது. மேலும் தாக்குதல் நடத்திய வழிமுறைகள் மற்றும் அதற்கு டுவிட்டர் நிறுவனம் மேற்கொண்ட தீர்வு நடவடிக்கைள் குறித்தும் அரசு கேட்டுள்ளது.

மத்திய அரசின் இந்த நோட்டீஸ் குறித்து டுவிட்டர் நிறுவனம் எந்த தகவலும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News