செய்திகள்
சுப்ரீம் கோர்ட்

அபராதத்தொகையில் தங்கள் பங்களிப்பாக தலா 50 காசுகள் வீதம் வசூல் செய்யும் சக வக்கீல்கள்

Published On 2020-07-19 09:01 GMT   |   Update On 2020-07-19 09:01 GMT
ரூ.100 அபராதத்தொகையில் தங்களின் பங்களிப்பும் இருக்க வேண்டும் என்று தலா 50 காசுகள் வீதம் வக்கீல்கள் வசூல் செய்து வருகிறார்கள்.
புதுடெல்லி:

சுப்ரீம் கோர்ட் வக்கீல் தீபக் கன்சல் என்பவர், பதிவுத்துறை, மனுக்களை பட்டியலிடும்போது செல்வாக்கு மிக்கவர்களுக்கு முன்னுரிமை அளிப்பதாக கூறி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், தான் தாக்கல் செய்த ஒரு அவசர மனு சில நாட்கள் தாமதமாக பட்டியலிடப்பட்டதாகவும், ஆனால் தனக்கு பிறகு தனியார் தொலைக்காட்சி நிறுவனம் தாக்கல் செய்த மனு, முன்கூட்டியே பட்டியலிடப்பட்டதாகவும் கூறியிருந்தார்.

இவரது மனுவை கடந்த 6-ந் தேதி நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான அமர்வு தள்ளுபடி செய்தது. மேலும் மனுதாரருக்கு ரூ.100 அபராதம் விதித்தனர்.

இந்தநிலையில், அபராதம் விதிக்கப்பட்ட வக்கீலுக்கு சக வக்கீல்கள் பலர் ஆதரவு தெரிவித்து உள்ளனர். அபராதத்தொகையில் தங்களின் பங்களிப்பும் இருக்க வேண்டும் என்று தலா 50 காசுகள் வீதம் அவர்கள் வசூல் செய்து வருகிறார்கள். 100 ரூபாய் வசூலானதும் பதிவுத்துறையில் டெபாசிட் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
Tags:    

Similar News