செய்திகள்
திருப்பதி கோவில்

திருப்பதி ஏழுமலையான் கோவில் ஜீயர்களுக்கு கொரோனா தொற்று

Published On 2020-07-18 08:57 GMT   |   Update On 2020-07-18 08:57 GMT
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பெரிய ஜீயர் மற்றும் சின்ன ஜீயருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
திருப்பதி:

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அர்ச்சகர்கள் 14 பேர், தேவஸ்தான பணியாளர்கள் 140 பேருக்கு இதுவரை தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில், ஏழுமலையான் கோவிலில் சடகோப ராமானுஜ பெரிய ஜீயர் மற்றும் சடகோப ராமானுஜ சின்ன ஜீயர் ஆகியோருக்கு வைரஸ் தொற்று உறுதியானதால், இருவரும் திருப்பதியில் உள்ள ஸ்ரீபத்மாவதி தனிமைப்படுத்தும் முகாமில் அனுமதிக்கப்பட்டனர்.

வைஷ்ணவ சம்பிரதாய அடிப்படையில் செயல்படும் ஏழுமலையான் கோவிலில் அதிகாலையில் நடை திறக்கப்பட்டு நடை அடைக்கப்படும் வரை நடைபெறும் சுப்ரபாதம், தோமாலை சேவை உள்ளிட்ட அனைத்து கைங்கரியங்களையும் ஜீயர்கள் கண்காணித்து வருவது வழக்கமாக உள்ளது.

தற்போது ஜீயர்கள் இருவரும் தொற்று பாதிப்புக்கு ஆளாகி இருப்பதால் ஏழுமலையான் கோவிலில் நடைபெறும் கைங்கரியங்களை இனி யார் கண்காணிப்பார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.
Tags:    

Similar News