செய்திகள்
யுனைடெட் ஏர்லைன்ஸ் விமானங்கள்

4 மாத இடைவெளிக்கு பிறகு இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு இன்று முதல் விமான சேவை

Published On 2020-07-17 07:14 GMT   |   Update On 2020-07-17 07:19 GMT
இந்தியா- அமெரிக்கா இடையே யுனைடெட் ஏர்லைன்ஸ் நிறுவனம் இன்று முதல் 31-ம் தேதி வரை 18 விமானங்களை இயக்க உள்ளது.
புதுடெல்லி:

இந்தியாவில் இருந்து சுமார் 4 மாத இடைவெளிக்கு பிறகு அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட உள்ளன. இதுதொடர்பாக விமானப் போக்குவரத்து துறை மந்திரி ஹர்தீப் சிங் பூரி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், இந்தியா- அமெரிக்கா இடையே அமெரிக்காவின் யுனைடெட் ஏர்லைன்ஸ் நிறுவனம் இன்று முதல் 31-ம் தேதி வரை 18 விமானங்களை இயக்க உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

அதில், டெல்லி - நியூயார்க் இடையே தினமும் ஒரு விமானம் வீதமும், டெல்லி - சான்பிரான்சிஸ்கோ இடையே வாரத்திற்கு மூன்று விமானங்களும் இயக்கப்பட உள்ளன. இதேபோன்று ஏர் பிரான்ஸ் நிறுவனம் டெல்லி, மும்பை, பெங்களூரில் இருந்து பிரான்ஸ் தலைநகர் பாரிசுக்கு நாளை முதல் ஆகஸ்ட் 1ம் தேதி வரை 28 விமானங்களை இயக்க உள்ளன.

ஜெர்மனி, பிரிட்டன் நாடுகளுக்கு விமானங்களை இயக்குவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் மந்திரி ஹர்தீப் சிங் பூரி குறிப்பிட்டுள்ளார்.

இருநாடுகளுக்கு இடையேயான விமானப் போக்குவரத்து உடன்படிக்கையை மீறி நியாயமற்ற வகையில் செயல்படுவதாக ஏர் இந்தியா சிறப்பு விமானங்களுக்கு அமெரிக்க தடை விதித்துள்ள நிலையில், அமெரிக்கா- இந்தியா இடையே புதிய ஒப்பந்தப்படி விமானங்கள் இயக்கப்பட உள்ளன.
Tags:    

Similar News