செய்திகள்
காய்கறி விற்பனை செய்யும் பிரசாத்

கால்பந்து பயிற்சியாளரை காய்கறி விற்பனையாளராக மாற்றிய கொரோனா

Published On 2020-07-16 12:45 GMT   |   Update On 2020-07-16 12:45 GMT
கொரேனா வைரஸ் தொற்றால் விளையாட்டு போட்டிகள் அனைத்தும் முடங்கியுள்ளதால், பயிற்சியாளர் ஒருவர் காய்கறி விற்பனையாளராக மாறியுள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் 25-ந்தேதி பொது முடக்கம் அறிவிக்கப்பட்டது. தற்போது வரை ஊரடங்கு அமலில் இருந்தாலும் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன.

ஆனால் தியேட்டர்கள், உடற்பயிற்சி கூடங்கள், விளையாட்டு பயிற்சிகளுக்கு இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை. இதனால் பயிற்சியாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

மும்பையில் வசித்து வரும் போஸ்லே என்பவர் கால்பந்து பயிற்சியாளராக இருந்து வந்தார். கொரோனா வைரஸ் பொது முடக்கத்தால் இவரது வேலை பறிபோய் உள்ளது. மேலும், வாழ்வாதாரம் முற்றிலும் முடக்கப்பட்டது.



இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் இருந்த நிலையில், சாப்பாட்டிற்காக காய்கறி விற்பனையாளராக மாறியுள்ளார். இதுகுறித்து பிரசாத் போஸ்லே கூறுகையில் ‘‘நான் பள்ளிக்கூடத்தில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வந்தேன். ஆனால் தற்போது கொரோன வைரஸ் லாக்டவுனால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளேன். அதனால் காய்கறி விற்பனை செய்ய ஆரம்பித்தேன். இரண்டு மாதங்களாக இந்தத் தொழிலை செய்து வருகிறேன்’’ என்றார்.



பல நிறுவனங்கள் ஆயிரக்கணக்கான பணியாளர்களை வேலையில் இருந்து நீக்கியுள்ளது. கட்டாய விடுப்பு அளித்துள்ளது.
Tags:    

Similar News