செய்திகள்
கொரோனா பரிசோதனை (பழைய படம்)

இந்தியாவில நேற்று ஒரே நாளில் 3.2 லட்சம் மாதிரிகள் பரிசோதனை

Published On 2020-07-16 01:01 GMT   |   Update On 2020-07-16 01:01 GMT
இந்தியாவில் நேற்று ஒரே நாளில் அதிகபட்சமாக 3.2 லட்சம் கொரோனா வைரஸ்க்கான மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் நாளுக்குநாள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் மத்திய அரசு பரிசோதனைகளை அதிகரிக்கும்படி வலியுறுத்தியுள்ளது.

நேற்றைய நிலவரப்படி இந்தியா முழுவதும் 1223 பரிசோதனை மையங்களுக்கு அனுமதி வழக்கப்பட்டது. இந்த மையங்களில் நேற்று மற்றும் 3.2 லட்சம் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. ஒரே நாளில் அதிகமான பரிசோதனை நடத்தப்பட்டது இதுவாகும். ஒட்டுமொத்தமாக இதுவரை 1.24 கோடி மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.

ரேபிட் ஆன்டிஜென் டெஸ்ட் வந்தபின் பரிசோதனை எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும், மேற்கு வங்காளம், குஜராத், ஜார்க்கண்ட், லடாக், மேகலயாகவில் சோதனைகளை அதிரிக்க வேணடும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். மே 25-ந்தேதி 1.5 லட்சமாக உயர்ந்த பரிசோதனை தற்போது 3.2 லட்சத்தை தொட்டுள்ளது.
Tags:    

Similar News