செய்திகள்
சச்சின் பைலட்

நான் பா.ஜ.க.வில் சேர மாட்டேன்- சச்சின் பைலட்

Published On 2020-07-15 04:40 GMT   |   Update On 2020-07-15 04:40 GMT
காங்கிரசில் பொறுப்பு மற்றும் துணை முதல்வர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ள சச்சின் பைலட், பா.ஜ.க.வில் சேர மாட்டேன் கூறி உள்ளார்.
ஜெய்ப்பூர்:

ராஜஸ்தானில் முதல் மந்திரி அசோக் கெலாட்டிற்கும், துணை முதல்வர் சச்சின் பைலட்டிற்கும் இடையில் பகிரங்கமாக மோதல் ஏற்பட்டது. சச்சின் பைலட் தனக்கு 20-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.-க்கள் ஆதரவு இருப்பதாக கூறியதுடன், காங்கிரஸ் சட்டமன்றக் குழு கூட்டத்தையும் புறக்கணித்தார். கொறாரா உத்தரவு பிறப்பித்தும் சச்சின் பைலட் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.

ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, ப. சிதம்பரம் போன்ற தலைவர்கள் சச்சின் பைலட்டுடன் பேசி சமரச முயற்சி மேற்கொண்டனர். அதற்கு பலன் அளிக்கவில்லை. 

இதையடுத்து சச்சின் பைலட், அவருக்கு ஆதரவான இரண்டு மந்திரிகள் ஆகியோர் மந்திரி சபையில் இருந்து நீக்கப்பட்டனர்.  ராஜஸ்தான் காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து சச்சின் பைலட் நீக்கப்பட்டு, கோவிந்த் சிங் நியமனம் செய்யப்பட்டார். 

அத்துடன் சச்சின் பைலட் மற்றும் அதிருப்தி எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யும் பணியில் காங்கிரஸ் தீவிரம் காட்டி வருகிறது.

காங்கிரசில் நீண்டகாலமாக முன்னணி தலைவராக இருந்த சச்சின் பைலட்டின் அடுத்தகட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும்? என்ற எதிர்பார்ப்பு கட்சிகளிடம் எழுந்துள்ளது. அவர் பாஜகவிற்கு வந்தால் வரவேற்பதாக அக்கட்சியின் முக்கிய தலைவர்கள் கூறி உள்ளனர்.

ஆனால் எந்த சூழ்நிலையிலும் பாஜகவில் சேர மாட்டேன் என சச்சின் பைலட் கூறி உள்ளார். சிலர் டெல்லியில் தலைமை பதவிகளில் உள்ளவர்களின் மனதில் நஞ்சை கலக்கும் வகையில், நான் பாஜகவில் சேர இருப்பதாக கூறுகின்றனர் என்றும் சச்சின் பைலட் கூறினார்.
Tags:    

Similar News