செய்திகள்
திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவில்

சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு திருவிதாங்கூர் மன்னர் குடும்பம் வரவேற்பு

Published On 2020-07-14 07:40 GMT   |   Update On 2020-07-14 07:40 GMT
திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவிலை நிர்வகிக்கும் உரிமை திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்துக்கு உண்டு என்று சுப்ரீம் கோர்ட்டு கூறியுள்ள தீர்ப்பை, மன்னர் குடும்பம் வரவேற்று உள்ளது.
திருவனந்தபுரம்:

திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவிலை நிர்வகிக்கும் உரிமை திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்துக்கு உண்டு என்று சுப்ரீம் கோர்ட்டு கூறியுள்ள தீர்ப்பை, மன்னர் குடும்பம் வரவேற்று உள்ளது.

இது தொடர்பாக மன்னர் குடும்பத்தைச் சேர்ந்த மூத்த உறுப்பினர் போயும் திருநாள் கவுரி பார்வதி பாயி வெளியிட்டுள்ள செய்தியில், சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு தங்கள் குடும்பத்துக்கு மட்டுமின்றி அனைத்து பக்தர்களுக்கும் கிடைத்த பத்மநாபசாமியின் ஆசி என்றும், அவரது அருளால் அனைத்து மக்களும் பாதுகாப்பாகவும், நலமாகவும் வாழ பிரார்த்திப்பதாகவும், நெருக்கடியான காலகட்டத்தில் தங்களுக்கு ஆதரவாக இருந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் கூறி உள்ளார்.சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை மதிப்பதாக கேரள தேவஸ்தான மந்தரி கடகம்பள்ளி சுரேந்திரன் தெரிவித்து உள்ளார்.

இதுபற்றி அவர் கூறுகையில், “சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை கேரள அரசு மதிக்கிறது, வரவேற்கிறது. தீர்ப்பு பற்றிய முழு விவரங்கள் இன்னும் கிடைக்கவில்லை. அதை நாங்கள் முழுமையாக ஆய்வு செய்ய வேண்டி இருக்கிறது. தீர்ப்பை நாங்கள் நிறைவேற்றுவோம்” என்றார்.

சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு வெளியானதும், பத்மநாபசாமி கோவில் அருகே திரண்ட சிலர், அனைவருக்கும் இனிப்பு வழங்கி தங்கள் மகிழ்ச்சியை கொண்டாடினார்கள்.
Tags:    

Similar News