செய்திகள்
கொரோனா நோயாளி உடலை எடுத்து சென்ற டாக்டர்

ஓட்டுனர் மறுப்பு - டிராக்டரை ஓட்டி கொரோனா நோயாளி உடலை எடுத்து சென்ற டாக்டர்

Published On 2020-07-13 13:33 GMT   |   Update On 2020-07-13 13:41 GMT
தெலுங்கானாவில் ஓட்டுனர் மறுத்த நிலையில், டாக்டர் ஒருவர் கொரோனா நோயாளி உடலை டிராக்டரை ஓட்டி சவக்குழிக்கு எடுத்து சென்றார்.
ஐதராபாத்:

தெலுங்கானாவின் பெடப்பள்ளி மாவட்டத்தில் அரசு மருத்துவமனை டாக்டராக ஸ்ரீராம் என்பவர் இருந்து வருகிறார்.  அவர், கொரோனா பரவல் தடுப்பு கண்காணிப்பு அதிகாரியாகவும் உள்ளார்.  இந்நிலையில், கொரோனா பாதித்ததில் உயிரிழந்த ஒருவரது உடலை சவக்குழிக்கு எடுத்து செல்ல வேண்டியிருந்தது.  ஆனால், சில காரணங்களுக்காக மாவட்ட நகராட்சி வாகன ஓட்டுனர் வர மறுத்துள்ளார்.

இதனால் நோயாளியின் உறவினர்கள் என்ன செய்வது என தெரியாமல் அவதிப்பட்டனர்.  தொடர்ந்து காலவிரயம் ஏற்பட்டது.  இதனால் உடலை எடுத்து செல்ல டாக்டர் முன்வந்துள்ளார்.  இதன்படி, தனிநபர் பாதுகாப்பு உபகரணம் அணிந்து கொண்டு டிராக்டர் ஒன்றில் உடலை ஏற்றி அதனை அவரே சவக்குழிக்கு ஓட்டி சென்றார்.

கொரோனா நோயாளியின் உடலை எடுத்து செல்ல பலரும் தயக்கம் காட்டி வரும் சூழலில், தெலுங்கானாவில் டாக்டர் ஒருவர் மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக செயல்பட்டது அனைவரது பாராட்டையும் பெற்றுள்ளது.  அவருக்கு தெலுங்கானா நிதி மந்திரி ஹரீஷ் ராவ் தனது பாராட்டுகளை டுவிட்டரில் தெரிவித்து கொண்டார்.
Tags:    

Similar News