செய்திகள்
கோப்புப்படம்

சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது

Published On 2020-07-13 07:37 GMT   |   Update On 2020-07-13 07:37 GMT
சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று இணையதளத்தில் வெளியானது.
புதுடெல்லி:

நாடு முழுவதும் உள்ள சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் பிப்ரவரி மாதம் 12-ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வும், மார்ச் மாதம் 10-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகளும் தொடங்கியது.

சில பாடங்களுக்கான தேர்வுகள் நடைபெற்ற போதும் பின்னர் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சில தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன.

இதையடுத்து ரத்து செய்யப்பட்ட தேர்வுகளுக்கு அகமதிப்பீடு, செயல்முறை தேர்வுகளின் அடிப்படையில் மதிப்பெண் வழங்க கடந்த மாதம் 26 ஆம் தேதி உச்ச நீதிமன்றம் அனுமதியளித்தது. இதனால் மாணவர்களின் மதிப்பெண்களை கணக்கீடும் பணியில் சிபிஎஸ்இ ஈடுபட்டது.

இந்நிலையில், சிபிஎஸ்இ 12 வகுப்புக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று இணையதளத்தில் வெளியானது.

cbseresults.nic.in, results.nic.in, cbse.nic.in என்ற இணையதளங்களில் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்
Tags:    

Similar News