செய்திகள்
வைரல் வீடியோ ஸ்கிரீன்ஷாட்

15 நொடி வீடியோவுக்கு சுமார் 7.5 கோடி செலவு என வைரலாகும் பகீர் வீடியோ

Published On 2020-07-13 03:58 GMT   |   Update On 2020-07-13 03:58 GMT
கடலில் ஐந்து தலை சுறா மீன் ஒன்று ஹெலிகாப்டரை கடலுக்குள் இழுக்கும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


கடலில் இருந்த அபாயகரமான உயிரினம் ஒன்று ஹெலிகாப்டரை கடலுக்குள் இழுக்கும் காட்சி அடங்கிய 15 நொடிகள் ஓடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

வைரல் வீடியோவில் சில இளைஞர்கள் படகு ஒன்று மீது இருந்து தங்களை காப்பாற்ற வந்த ஹெலிகாப்டரை ஆவலுடன் எதிர்நோக்கி இருக்கின்றனர். திடீரென கடலில் இருந்து வெளியேறும் அபாயகரமான உயிரினம் ஹெலிகாப்டரை கடலுக்குள் இழுக்கிறது.



15 நொடிகள் ஓடும் வீடியோவை தனியார் தொலைகாட்சி சேனல் ஒன்று இந்திய மதிப்பில் சுமார் 7.5 கோடி செலவிட்டு வாங்கியதாக சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

வைரல் வீடியோ ஸ்கிரீன்ஷாட்களை இணையத்தில் தேடிய போது, அது 5 headed shark எனும் திரைப்படத்தின் டிரெயிலர் காட்சிகள் என தெரியவந்துள்ளது. அந்த வகையில் வைரல் தகவல்களில் உள்ளது போன்று இந்த வீடியோவை தனியார் தொலைகாட்சி நிறுவனம் சுமார் 7.5 கோடி செலவிட்டு வாங்கவில்லை என தெரியவந்துள்ளது.

போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன.
Tags:    

Similar News