செய்திகள்
ஜேபி நட்டா

கேரளாவில் கடத்தப்பட்ட தங்கத்தின் நிறம் சிவப்பு - ஜேபி நட்டா கடும் தாக்கு

Published On 2020-07-12 19:10 GMT   |   Update On 2020-07-12 19:10 GMT
கேரளாவில் கடத்தப்பட்ட தங்கத்தின் நிறம் சிவப்பு என ஆளும் மார்க்சிஸ்ட் கட்சியை, பா.ஜ.க. தேசிய தலைவர் ஜேபி நட்டா கடுமையாக விமர்சித்துள்ளார்.
புதுடெல்லி:

கேரள மாநிலத்தின் காசர்கோடு மாவட்டத்தில், பா.ஜ.க. அலுவலகம் திறக்கப்பட்டது.  பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி. நட்டா டெல்லியில் இருந்து வீடியோ கான்பரன்சிங்கில் இதனை திறந்து வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:

கேரளாவில் ஆளும் மார்க்சிஸ்ட் கட்சித் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணியும், காங்., தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணியும், ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள். மக்களின் ஆதரவு தங்களுக்கு இருப்பதாக அவர்கள் கூறிக்கொள்கிறார்கள்.

தென் மாநிலங்களில் பா.ஜ.க.வின் ஓட்டு சதவீதம் ஒவ்வொரு தேர்தலிலும் அதிகரித்து வருகிறது. கேரளாவில் தனது கொடியை நிச்சயம் பா.ஜ.க ஊன்றும். தங்கத்தின் நிறம் மஞ்சள்; ஆனால் கேரளாவில் மட்டும் தங்கத்தின் நிறம் 'சிவப்பு'. தங்க கடத்தலில் முதல்வர் அலுவலகத்துக்கு தொடர்பு உள்ளது என தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News