செய்திகள்
சச்சின் பைலட்

ராஜஸ்தான் அரசியலில் திடீர் திருப்பம்: சச்சின் பைலட் பா.ஜனதாவுடன் பேசிவருவதாக தகவல்

Published On 2020-07-12 08:58 GMT   |   Update On 2020-07-12 08:58 GMT
தனக்கு 19 எம்.எல்.ஏ-க்கள் ஆதரவு இருப்பதாக காங்கிரஸ் இளம் தலைவரான சச்சின் பைலட் பா.ஜனதாவுடன் பேசி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன்.
ராஜஸ்தான் மாநிலத்தில் அசோக் கேலாட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. எதிர்க்கட்சியான பா.ஜனதாவுக்கும், காங்கிரஸ் கூட்டணிக்கும் மிகப்பெரிய அளவில் வித்தியாசம் கிடையாது. இதனால் அசோக் கேலாட் தொடக்கத்தில் இருந்தே ஒருவித அச்சத்துடனேயே ஆட்சி செய்து வந்தார்.

கடந்த மாதம் நடைபெற்ற நாடாளுமன்ற மாநிலங்களவை தேர்தலுடன் காங்கிரஸ் எம்.எல்.ஏ.-க்களை விலைக்கு வாங்கி பா.ஜனதா ஆட்சியை கவிழ்க்க சதி செய்து வருகிறது என்று அசோக் கேலாட் குற்றம்சாட்டினர். அவருக்கு சச்சின் பைலட் ஆதரவாக இருந்தார். அந்த நேரத்தில் குழப்பம் ஏதும் ஏற்படவில்லை.

இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக அதே பிரச்சினை ஏற்பட்டுள்ளது. அசோக் கேலாட் குற்றம்சாட்டி வருகிறது. இந்நிலையில் ஐந்து எம்.எல்.ஏ.-க்களுடன் சச்சின் பைலட் டெல்லி சென்றார்.

தற்போது தன்னுடன் 19 எம்.எல்.ஏ.-க்கள் உள்ளன என்று சச்சின் பைலட் பா.ஜனதாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒருவேளை இது உண்மை என்றால் மத்திய பிரதேசத்தில் ஜோதிராதித்ய சிந்தியா பிரிந்து சென்று காங்கிரஸ் ஆட்சியை கவிழ்த்தது போல் சச்சின் பைலட்டும் ராஜஸ்தானில் ஆட்சியை கவிழ்க்க வாய்ப்புள்ளது.

இதனால் ராஜஸ்தான் அரசியலில் புயல் அடித்துள்ளது.

ராஜஸ்தான் சட்டசபை தேர்தலின் போது சச்சின் பைலட் தீவிரமாக உழைத்தார். அவர்தான் காங்கிரஸ் முதலமைச்சர் வேட்பாளர் என்று கூறப்பட்டது. ஆனால் தேர்தல் முடிந்த பின்னர் அசோக் கேலாட் முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டார். இதனால் சச்சின் பைலட் அதிருப்தியில் இருந்து வந்ததாக கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News