செய்திகள்
மருத்துவனைகள் அலைக்கழிப்பால் மாணவன் உயிரிழப்பு

மூன்று மருத்துவமனைகள் அலைக்கழித்ததால் பரிதாபமாக உயிரிழந்த 12-ம் வகுப்பு மாணவன்

Published On 2020-07-12 08:02 GMT   |   Update On 2020-07-12 08:16 GMT
மூன்று மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு அனுமதிக்காத நிலையில், தற்கொலை செய்து கொள்வேன் என்று தாய் மிரட்டி அனுமதித்த போதிலும், பலனளிக்காமல் போன துயர சம்பவம் நடைபெற்றுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவில் அதிகரித்த வண்ணம் உள்ளது. தற்போது வரை 8.5 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நாட்டின் முக்கியமான நகரங்களில் உள்ள மருத்துவமனைகளில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு படுக்கை வசதிகள் இல்லாத நிலை உருவாகியுள்ளது.

இதற்கிடையில் சில மருத்துவமனைகளில் நோயாளிகளை சிகிச்சை அனுமப்பதில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. இதனால் காப்பாற்றப்பட்டிருக்க வேண்டிய சில உயிர்கள் மடிந்துள்ள சோக சம்பவங்கள் நடைபெற்றுள்ளன.

இதேபோன்று சோக சம்பவம் ஒன்று கொல்கத்தாவில் நடைபெற்றுள்ளது. சுப்ராஜித் என்ற 12-ம் வகுப்பு மாணவன் இளம் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை (நேற்றுமுன்தினம்) காலை அவனுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. கமர்ஹாத்தியில் உள்ள இஎஸ்ஐ மருத்துவமனைக்கு பெற்றோர்கள் அவனை அழைத்துச் சென்றுள்ளனர். ஐசியூ வார்டில் பெட் இல்லை என்று மருத்துவமனையில் தெரிவித்து அனுமதிக்க மறுத்துவிட்டனர்.

அப்புறம் அவனை தனியார் நர்சிங் ஹோம் ஒன்று அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அவனுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. பரிசோதனை முடிவில் கொரோனா தொற்று இருந்தது தெரியவந்துள்ளது. பின்னர் அவர்களும் எங்களிடம் பெட் இல்லை என்று கூறியிருக்கிறார்கள்.

அதன்பின் அரசு நடத்தும் சகர் தத்தா மருத்துவமனைககு அழைத்துச் சென்றுள்ளனர் அங்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாணவனின் பெற்றோர் காவல்துறையிடம் முறையிட்டுள்ளனர். அவர்கள் கொல்கத்தா மெடிக்கல் காலேஜ் மற்றும் மருத்துவமனை-க்கு (KMCH) அழைத்துச் செல்ல ஆலோசனை வழங்கியுள்ளனர்.

‘‘அங்கு சென்றதும் எங்களது மகனுக்கு கொரோனா தொற்று இருந்தும் தொடக்கத்தில் அனுமதிக்க மறுத்தனர். எங்களது மகனை அனுமதிக்காவிடில் தற்கொலை செய்து கொள்வேன் என எனது மனைவி மிரட்டினார். அதன்பின் சேர்த்தனர்.

எனது மகனுக்கு அவர்கள் எந்தவொரு மருத்துவ சிகிச்சையும் அளிக்கவில்லை. அவனை சில வார்டுகளுக்கு கொண்டு சென்றனர். நாங்கள் அங்கு அனுமதிக்கப்படவில்லை. அவனுடைய உடல்நலம் குறித்து நாங்கள் விசாரித்த போது யாரும் எங்களுக்கு உதவவில்லை.

அதன்பின் விசாரணை பிரிவுக்குச் சென்றோம். அப்போது இரவு 9.30 மணியளவில் இறந்து போனதாக தெரிவித்தனர்’’ என்று அந்த மாணவனின் தந்தை சோகத்துடன் தெரிவித்தார்.

மேலும் ‘‘எங்களது மகனை உரிய நேரத்தில் அனுமதித்திருந்தால், அவனது உயிரை கட்டாயம் காப்பாற்றியிருக்க முடியும். மெடிக்கல் கல்லூரியில் கூட எந்த சிகிச்சையும் கிடைக்கவில்லை’’ என்றார்.
Tags:    

Similar News