செய்திகள்
கொரோனா வைரஸ்

இந்தியாவில் கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் விகிதம் 62.78 சதவிகிதமாக உயர்வு - மத்திய சுகாதாரத்துறை

Published On 2020-07-11 14:04 GMT   |   Update On 2020-07-11 14:04 GMT
இந்தியாவில் கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் விகிதம் 62.78 சதவிகிதமாக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
புதுடெல்லி:

இந்தியாவில் கொரோனா பரிசோதனை எண்ணிக்கையை அதிகரிப்பதில் மத்திய அரசு தீவிர வேகம் காட்டி வருகிறது. அதன்படி நேற்று முன்தினம் வரை 1 கோடியே 19 லட்சத்து 24 ஆயிரத்து 491 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆய்வு கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) தெரிவித்துள்ளது. பரிசோதனைகள் அதிகரிக்கப்பட்டு இருப்பதன் மூலம் இந்தியாவில் நாளுக்குநாள் கொரோனா தொற்று உறுதி செய்யப்படுபவர்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே செல்கிறது.

முன்பு எப்போதும் இல்லாத அளவில் நேற்று முன்தினம் சுமார் 25 ஆயிரம் பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டு இருந்தது. இந்த நிலையில் நேற்றைய பாதிப்பு அந்த எண்ணிக்கையை முறியடித்துள்ளது. அந்த வகையில் ஒரே நாளில் புதிதாக 26 ஆயிரத்து 506 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.

இதனால் நாட்டில் இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8 லட்சத்தை தாண்டியது. பாதிப்பு அதிகரித்து வரும் அதே வேளையில், இந்த நோய்த்தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை இதில் 5 லட்சத்து 5,15,385 பேருக்கு மேல் குணம் அடைந்துள்ளனர். தற்போது 2,31,978 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இந்நிலையில் இந்தியாவில் கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் விகிதம் 62.78 சதவிகிதமாக உயர்ந்துள்ளதாக சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News