செய்திகள்
தானேயில் முழு ஊரடங்கு

தானேயில் முழு ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டிப்பு

Published On 2020-07-11 03:02 GMT   |   Update On 2020-07-11 03:02 GMT
முழுஊரடங்கு நாளையுடன்(ஞாயிற்றுக்கிழமை) முடிவுக்கு வரும் நிலையில், தானேயில் வருகிற 19-ந் தேதி வரை மேலும் ஒரு வாரத்துக்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது.
மும்பை :

மும்பைக்கு அடுத்தபடியாக தானே மாவட்டத்தில் கொரோனாவால் அதிகம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

குறிப்பாக தானே மாநகராட்சி பகுதியில் தொற்று பாதித்தோர் எண்ணிக்்கை 12 ஆயிரத்து 469 ஆக அதிகரித்து உள்ளது. மேலும் இதுவரை 463 பேர் பலியாகி உள்ளனர். இந்த நிலையில், தானே நகரில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக கடந்த 2-ந் தேதி முதல் 10 நாட்கள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

இதன்படி அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளையும் மூட உத்தரவிடப்பட்டது. அந்த பொருட்களை வீடுகளுக்கு கொண்டு சென்று வினியோகம் செய்ய அனுமதிக்கப்பட்டு உள்ளது.

முழுஊரடங்கு நாளையுடன்(ஞாயிற்றுக்கிழமை) முடிவுக்கு வரும் நிலையில், தானேயில் வருகிற 19-ந் தேதி வரை மேலும் ஒரு வாரத்துக்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது.

இந்த உத்தரவை மாநகராட்சி கூடுதல் கமிஷனர் கணேஷ் தேஷ்முக் பிறப்பித்து உள்ளார்.
Tags:    

Similar News