செய்திகள்
டிக்டாக்

டிக்டாக் செயலியை நீக்கவேண்டும் - ஊழியர்களுக்கு அமேசான் வலியுறுத்தல்

Published On 2020-07-10 17:41 GMT   |   Update On 2020-07-10 17:41 GMT
பாதுகாப்பு காரணங்களுக்காக டிக்டாக் செயலியை ஸ்மார்ட்போன்களில் இருந்து நீக்கவேண்டும் என ஊழியர்களுக்கு அமேசான் நிறுவனம் வலியுறுத்தியுள்ளது.
புதுடெல்லி:

லடாக் எல்லை அருகே கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த மாதம் 15-ம் தேதி இந்திய- சீன வீரர்களிடையே ஏற்பட்ட மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் உயிரிழந்தனர். சீனா தரப்பிலும் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால் அதன் விவரங்களை அவர்கள் வெளியிடவில்லை. இதையடுத்து அங்கு பதற்றம் ஏற்பட்டதால், இரு நாட்டு ராணுவப் படைகளும் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு அருகே குவிக்கப்பட்டன.

இரு நாட்டு ராணுவ கமாண்டர்கள் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் சுமூக உடன்பாடு எட்டப்பட்டதைத் தொடர்ந்து, சீனப் படைகள் கல்வான் மோதல் நடத்த பகுதியில் இருந்து சுமார் 2 கி.மீ. தூரத்திற்குப் பின்னோக்கிச் சென்றன.

இந்நிலையில், பாதுகாப்பு உள்ளிட்ட காரணங்களுக்காக டிக்டாக் செயலியை தங்களது ஸ்மார்ட்போன்களில் இருந்து நீக்கவேண்டும் என ஊழியர்களுக்கு அமேசான் நிறுவனம் வலியுறுத்தியுள்ளது.
Tags:    

Similar News