செய்திகள்
ராணா கபூர்

யெஸ் வங்கி நிறுவனர் ராணா கபூரின் ரூ.2,203 கோடி சொத்துகள் முடக்கம்

Published On 2020-07-10 07:24 GMT   |   Update On 2020-07-10 07:24 GMT
யெஸ் வங்கி நிறுவனர் ராணா கபூரின் ரூ.2 ஆயிரத்து 203 கோடி சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கி உள்ளது.
மும்பை:


யெஸ் வங்கி நிறுவனர் ராணா கபூரின் ரூ.2 ஆயிரத்து 203 கோடி சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கி உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு, நிதி நெருக்கடியில் சிக்கிய யெஸ் வங்கியை ரிசர்வ் வங்கி தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது. லஞ்சம் வாங்கிக் கொண்டு, ஏராளமான கடன்களை வாங்கி ந‌‌ஷ்டம் ஏற்படுத்தியதாக யெஸ் வங்கியின் நிறுவனர் ராணா கபூர் கைது செய்யப்பட்டார். 

அவர் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். 

இந்நிலையில், ராணா கபூர் உள்ளிட்டோருக்கு சொந்தமான ரூ.2 ஆயிரத்து 203 கோடி மதிப்புள்ள சொத்துகளை அமலாக்கப்பிரிவு முடக்கி உள்ளது. 

மேலும், டி.எச்.எப்.எல். நிறுவன உரிமையாளர்களான கபில், தீரஜ் வதாவன் ஆகியோருக்கு சொந்தமான சொத்துகளையும் அமலாக்கப்பிரிவு முடக்கி உள்ளது. 

யெஸ் வங்கி முறைகேடு தொடர்பாக சி.பி.ஐ. போலீசாரும் விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கில் சமீபத்தில் மும்பை கோர்ட்டில் சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News