செய்திகள்
சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன்

இந்தியாவில் கொரோனா தொற்று சமூக பரவலாக மாறவில்லை - சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்

Published On 2020-07-09 11:07 GMT   |   Update On 2020-07-09 11:07 GMT
இந்தியாவில் கொரோனா தொற்று சமூக பரவலாக மாறவில்லை என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:

டெல்லியில் சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷர்தன் தலைமையில் நாட்டில் கொரானா பரவலை கட்டுப்படுத்துவது, மருத்துவ கட்டமைப்பு வசதிகள் குறித்து விவாதிப்பதற்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் ஜெய்சங்கர், ஹர்தீப் சிங் பூரி மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் ஹர்ஷவர்த்தன், நாட்டில் கொரோனா சமூக பரவலாக மாறவில்லை என நிபுணர்கள் தெரிவித்ததாக கூறினார். ஒரு சில பகுதிகளில் தொற்று அதிகமாக உள்ள நிலையில், சமூக தொற்றாக மாறவில்லை என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

கொரோனா பரவலில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளதாக செய்திகள் வெளியாகும் நிலையில், மக்கள் தொகையில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளதையும் புரிந்து கொள்ள வேண்டும் என அவர் சுட்டிக்காட்டினார். உலகில் பத்து லட்சம் பேருக்கு ஆயிரத்து 453 பேர் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், இந்தியாவில் 538 ஆக உள்ளதாகவும் மத்திய அமைச்சர் ஹர்சவர்த்தன் தெரிவித்துள்ளார். 
Tags:    

Similar News