செய்திகள்
சுரேஷ்குமார்

கர்நாடகத்தில் பள்ளிகளை மீண்டும் திறப்பது எப்போது?: மந்திரி சுரேஷ்குமார் பதில்

Published On 2020-07-09 03:45 GMT   |   Update On 2020-07-09 03:45 GMT
கர்நாடகத்தில் பள்ளிகளை மீண்டும் திறப்பது எப்போது? என்பது பற்றி மந்திரி சுரேஷ்குமார் பதில் அளித்துள்ளார்.
பெங்களூரு :

கர்நாடகத்தில் பள்ளிகளை மீண்டும் திறக்க அரசு திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியானது. கொரோனா தீவிரமாக பரவி வரும் நிலையில் பள்ளிகளை திறப்பது குறித்த தகவல் பெற்றோர் மற்றும் மாணவர்கள் இடையே பீதியை ஏற்படுத்தியது. இதுகுறித்து பள்ளி கல்வித்துறை மந்திரி சுரேஷ்குமார் விளக்கம் அளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

கர்நாடகத்தில் பள்ளிகளை திறப்பது குறித்தோ அல்லது ஆன்லைன் கல்வி திட்டத்தை அமல்படுத்துவது குறித்தோ மாநில அரசு இதுவரை எந்த முடிவையும் எடுக்கவில்லை. மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு அரசு நல்ல முடிவை எடுக்கும். பள்ளிகளை மீண்டும் திறப்பது தொடர்பாக ஊடகங்களில் வெளியாகும் தகவலில் உண்மை இல்லை.

வதந்திகளை பெற்றோர் மற்றும் மாணவர்கள் நம்ப வேண்டாம். ஆன்லைனில் கற்பித்தலை தொடங்க ஒரு நிபுணர் குழு அமைக்கப்பட்டது. அந்த குழு தனது அறிக்கையை நேற்று (நேற்று முன்தினம்) என்னிடம் வழங்கியுள்ளது. ஆன்லைன் கல்வி எப்படி இருக்க வேண்டும், ஆன்லைன் கல்வியுடன் ஆப்லைன் கல்வியும் இருக்க வேண்டும் என்பது தொடர்பாக 10 முக்கியமான அம்சங்களை அந்த குழு பரிந்துரை செய்துள்ளது. இந்த பரிந்துரைகளை அமல்படுத்துவது குறித்து அரசு தீவிரமாக ஆலோசித்து முடிவு எடுக்கும்.

இவ்வாறு மந்திரி சுரேஷ்குமார் கூறினார்.
Tags:    

Similar News